ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அன்னாத்த, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என அடுத்தடுத்து படங்கள் செய்தது. இக்கூட்டணி மீண்டும் மற்றுமொரு முறை இணைகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைமை தாங்குகிறார். இதற்கு இடையே லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 என இரு படங்களில் நடிக்கிறார் சூப்பர்ஸ்டார்.
தற்போது கோலிவுட் இயக்குனர்களில் உச்சத்தில் ராஜா போல் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஏன் இந்தியாவிலேயே அவரக்கு டிமாண்ட் ஜாஸ்தி. அதனால் அவரின் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் கூடுதலாகவே இருக்கும். திரைப்பட அறிவிப்பு தவிர இன்னும் படக்குழு எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எல்.சி.யூ அடுத்தடுத்த படங்களில் விரிவடைந்து கொண்டே வருகிறது. அதனால் ரஜினியுடன் செய்யும் படமும் அதில் சேருமா என்ற கேள்விகள் எழும்பின. ஆனால் லோகேஷ் கனகராஜ் லியோ பட நேர்காணல் பலவற்றில் இல்லை எனத் தெளிவாக அறீவ்த்துவிட்டார். ரஜினிகாந்தும் அதையே எதிர்பார்க்கிறார்.
எனினும் மேலும் ஓர் கன்டிஷனை முன் வைத்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் எல்.சி.யூ படத்தில் நடித்தவர்கள் யாரும் இந்தப் படத்தில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். புதிய சில நடிகர்களுடன் ரஜினி நடிக்க ஆசைப்படுகிறார். அதன்படி லோகேஷ் கனகராஜ் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் வைராலன செய்தியின் படி நடிகர் மற்றும் ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் செய்கிறாராம். வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் படத்தின் மூலம் அவர் சொன்னது போலவே பேய் பட இமேஜை நீக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
தலைவர் 170 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் எனவும் அதுவரை ஸ்கிரிப்ட் பணிகளில் கவனம் செலுத்துவதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு படமும் வசூல் ரீதியாக பெருகிக் கொண்டே போகிறது. அதனால் ரஜினி – லோகேஷ் கூட்டணி 1000 கோடி வசூலை இலக்காக வைத்து பணிபுரியும்.