Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமா2023ஆம் ஆண்டு அதிக மக்களால் தேடப்பட்ட 10 திரைப்படங்கள்.. கூகுள் வெளியிட்ட பட்டியல்

2023ஆம் ஆண்டு அதிக மக்களால் தேடப்பட்ட 10 திரைப்படங்கள்.. கூகுள் வெளியிட்ட பட்டியல்

2023 ஆம் ஆண்டு திரைப்பட ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த ஆண்டு மட்டும் தான் நடிகர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களும் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் திரைப்படங்களும் வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

- Advertisement -

மேலும் இந்தி சினிமாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானின் ஜவான் ,பதான் திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளி இருக்கிறது.  இந்த நிலையில் கூகுளில் அதிக அளவு எந்த படம் குறித்து இந்தியர்கள் தேடியிருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது..

அதில் முதலிடத்தில் அட்லீ ஷாருக்கான் வைத்து இயக்கிய ஜவான் திரைப்படத்தை தான் மக்கள் அதிக முறை தேடியிருக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை என்ற திரைப்படம் பிடித்திருக்கிறது. சன்னி தியோல் நடித்த பிரபல திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இது அமைந்து இருக்கிறது.

- Advertisement -

வசூலில் வாரி குவித்தது மூன்றாவது படமாக ஹாலிவுட் திரைப்படமான ஓபன்ஹைம்ர் இருக்கிறது .இந்த படம் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியது. நான்காவது இடத்தில் வசூல் ரீதியாக தோல்வியை தழுவிய ஆதிபுருஷ் திரைப்படம் இருக்கிறது  ராமாயண கதையை வைத்து பிரபாஸ் நடித்த இந்த திரைப்படம் தோல்வி தழுவினாலும் மக்கள் இதனை அதிக அளவு கூகுளில் தேடியிருக்கிறார்கள்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் நடிகர் சாருக் கான் நடித்து பதான் திரைப்படம் இருக்கிறது. ஆறாவது இடத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி திரைப்படம் இருக்கிறது. இது குறித்து மக்கள் அதிக அளவு கூகுளில் தேடியிருக்கிறார்கள். ஏழாம் இடத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயலலிதா திரைப்படம் இருக்கிறது.

ஜெயில் திரைப்படத்தில் பல மாநில சூப்பர் ஸ்டாரர்களும் இடம்பெற்றுள்ளதால் இதனை மக்கள் இந்தியா முழுவதும் அதிகமாக தேடியிருக்கிறார்கள். எட்டாவது இடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது. வீடியோ திரைப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் இது இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

ஒன்பதாம் இடத்தில் சல்மான் கான் நடித்த டைகர் திரைப்படம் இருக்கிறது. பத்தாவது இடத்தில் மீண்டும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இருக்கிறது.  இந்த பட்டியலில் அஜித் நடித்த துணிவு அன்பிற்கு கபூர் நடித்த அனிமல் ஆகிய படங்கள் இடம்பெறவில்லை.

Most Popular