கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான டபிள் எக்ஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வாரேர்ப்பை பெற்றது. முதல் பாகம் நகைச்சுவையாக அமைய இப்படம் ஆக்க்ஷன் மற்றும் எமோஷனலாக அமைந்தது.
கேங்ஸ்டர் ராகவா லாரன்ஸை பிடிக்க இயக்குனர் வேடம் அணிந்து அவரைப் வைத்து படம் இயக்குவதாக கூறி கொல்ல முயற்சிக்கிறார். இரண்டாம் பாதியில் முற்றிலும் மாறி காட்டு வாழ் மக்களின் துயரத்தை படம் எடுத்துரைக்கிறது. அனைத்தையும் படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா இறுதியில் சினிமாவின் பலத்தை காட்டுகிறார்.
அரசியல் பற்றியும் இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சரியாக பேசியுள்ளார். வெஸ்ட்டர்ன் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படங்களின் சாயலை இவரது படங்களிலும் உணர இயலும். ஜிகர்தண்டா 2ஆம் பாகத்தில் பிரம்மாண்ட நடிகர் மற்றும் இயக்குநருமான கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகராக ராகவா லாரன்ஸ் வருகிறார்.
மேலும் இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் வருவது போல எடிட்டிங் செய்துள்ளார்கள். படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் கட் அவுட், அவர் படங்கள் ஒடும் தியேட்டர் என தன் ஃபேன்பாய் அன்பைக் காட்டியுள்ளார் இயக்குனர். இப்படத்தில் தான் இருப்பதை கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு தெரியுமா ? தெரியவில்லை என்றாலும் நம் மக்கள் தெரியப்படுத்திவிடுவர்.
டிவிட்டரில் விஜய் எனும் ரசிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஃபேன்ஸ்சின் அதிகாரபூர்வ பக்கத்தில் இது குறித்து டுவீட் செய்தார். அதற்க்கு அவர்கள் பதிலும் அளித்துள்ளனர். அதாவது ஜிகர்தண்டா 2ஆம் பாகம் படம் பற்றியும் அதில் தான் இடம் பெறுவதையும் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு தெரியும். தன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றப் பின் அவர் பார்த்து டுவீட் செய்வார் என கூறியிருக்கிறார்கள்.
இச்செய்தியை கண்ட ரசிகர்களும் அதில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் மிகவும் சந்தோஷத்தோடு தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கிளின்ட் ஈஸ்ட்வுட் வரை எடுத்துச் சென்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.