Saturday, May 11, 2024
- Advertisement -
Homeசினிமாஇரவு 3 மணி வரை..! விக்னேஷ் சிவன் போடும் ஆட்டம்.. டிவிட்டரில் பற்ற வைத்த எஸ்ஜே...

இரவு 3 மணி வரை..! விக்னேஷ் சிவன் போடும் ஆட்டம்.. டிவிட்டரில் பற்ற வைத்த எஸ்ஜே சூர்யா

கமர்சியல் ஆக்சன், திகில் ,த்ரில்லர், காமெடி என்று எத்தனை வகையான திரைப்படங்களை இயக்கினாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு உண்டு. அதற்கு காரணம் அன்றைய சமயத்தில் இருக்கும் இளைஞர்களை அதுபோன்ற திரைப்படங்கள் வெகுவாக இருக்கிறது.அதை குறிவைத்து தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு அம்பை தொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த அம்பிற்கு எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் )என்று பெயர் வைத்திருக்கிறார் .இந்தப் பெயரிலேயே பல ரசிகர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள் அப்படி ஒரு கிளுகிளுப்பான பெயரை இப்படத்திற்கு வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன், நிஜ வாழ்விலேயே தமிழ் சினிமாவையே தம் இயல்பான நடிப்பாலும் பேரழகாலும் தன் வசப்படுத்திய நடிகை நயன்தாராவை காதல் மனைவியாக அடைந்தவர். இதன் காரணத்தால் தான் இத்திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு வந்ததோ என்று கேள்வி எழு வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

- Advertisement -

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இப்படத்தில் கூடுதல் அம்சமாக திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் திறன் கொண்ட எஸ் ஜே சூர்யாவும் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையெல்லாம் அறிந்த ரசிகர்கள் ஏற்கனவே திரைப்படத்தின் மீது பேரார்வம் கொண்டு காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா தன்னுடைய எக்ஸ்பக்கத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டு இருக்கிறார் எல்ஐசி( லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) இந்த திரைப்படத்தின் பெயர் எந்த அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது, அதே அளவிற்கு திரைப்படத்தில் நடிப்பதும் உற்சாகமாக இருக்கிறது.

எல்ஐசி திரைப்படத்திற்காக மதியம் மூன்று மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை ஏறத்தாழ 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. விக்னேஷ்வினி திரைப்படத்தின் மீது அதிகமான கவனம் செலுத்தி வருகிறார் மேலும் விக்னேஷ் சிவன் எங்களை இத்திரைப்படத்தின் மூலம் புதுயுக காதல் உலகிற்கே அழைத்து செல்ல தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்.

எல்ஐசி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் உள்ளது என்று இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் எலும் வகையில் இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிகர்.பிரதீப் ரங்கநாதனும் இதுபோன்ற நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் நிச்சயமாக இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏற்கனவே அஜித் நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனராகம் வாய்ப்பு கிடைக்காமல் போன இந்த சமயத்தில் இவர் தற்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் வெற்றியைத் தேடித் தர இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular