விடாமுயற்சி என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் பல தடைகளை தாண்டி விடாமுயற்சிக்கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு சீக்ரடாக நடந்து வருகிறது
ஆரம்பத்தில் இருந்தே திரைப்படத்திற்கு நிறைய தடங்கள் ஏற்பட்டதால் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படபிடிப்பு நடப்பதும் வெளியில் தெரியாதவாறு செய்து வருகிறார்கள். பட குழுவினர்கள் இதை தொடர்ந்து தன் அடுத்த திரைப்படம் ஆன ஏ கே 63 வது திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே போல் அஜித்தின் 64வது திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்து இரண்டு படத்திற்கு கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் அஜித் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இப்படி ஒரு சந்தோஷத்தை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
பேன் இந்தியன் மொழிகளில் ஆக்சன் திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீள் உடன் தன்னுடைய 65 ஆவது திரைப்படத்தை நடிகர் அஜித் நடிக்கும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவருவதில்லை. ஆனால் இது மட்டும் உண்மையானால் மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் நிச்சயம் அடைந்தே தீரும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் திரைப்படமும் தற்பொழுது பிரபாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் சலார் திரைப்படமும் அவரின் இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இதனால் இவர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் அதன் தல அஜித் நடிக்கிறார் என்றால் ரசிகர்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள்.
இயக்குனர் பிரசாந்த் நீல் தற்பொழுது கேஜிஎப் திரைப்படத்தின் மூன்றாம் சாப்டரையும் சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதா அஜித்தை வைத்து எடுக்க இருக்கும் திரைப்படத்தைப் பற்றி எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருக்கலாம் .திரைப்படங்கள் முடிந்த பிறகு அஜித்தை வைத்து எடுக்கப் போகும் திரைப்படத்தைப் பற்றி பிரசாந்த் நீ கூறுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.