திரைப்பட நடிகைகளுக்கு இணையாக ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரை ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள் என்றால் அது பெப்சி உமாவை தவிர வேறு யாரும் இல்லை.
90s களின் பேவரட் தொகுப்பாளர் என்றால் அது பெப்சி உமா தான். குடும்ப பாங்கான முகம், அழகான பேச்சு, எதார்த்தமான பாவனைகள் என்று எல்லாவற்றிலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்தார் பெப்சி உமா.
ஆனால் பல நாட்களாக இவர் இருந்த இடமே தெரியவில்லை தற்பொழுது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறார் பெப்சி உமா. இன்னும் அதே அழகு குறையாமல் ரசிகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறார் பெப்சி உமா.
இவர் மீண்டும் பிரபலமாகி வரும் இந்த நிலையில் இவரிடம் பல தனியார் நிறுவனங்கள் பேட்டி எடுத்து வருகிறார்கள் கடைசியாக இவர் ஒரு பேட்டியில் பங்கு பெற்றிருந்தார்.
அதில் அவரிடம் சினிமாவில் நடிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு அவர் சினிமாவில் நடிப்பது விருப்பம் இல்லை என்றார் .
மேலும் ஆரம்ப காலத்தில் முத்து மற்றும் இன்னுமொரு திரைப்படத்திற்கும் என்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே கதாநாயகியாக நடிக்குமாறு கேட்டிருந்தார் .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்கும் பொழுது மறுப்பதற்கு யாருக்குமே மனம் வராது. நானும் பல தயக்கங்களுடன் தான் அதை மறுத்தேன். நான் கூப்பிடும் மறுத்து விட்டீர்களே என்று என்னிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனரான சுபாஷ்கை ஷாருக்கான் உடைய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வீடு தேடி வந்து அக்ரீமெண்டில் கையெழுத்து கேட்டார் ஆனால் ,நான் அதையும் மறுத்து விட்டேன் .
எனக்கு ஒரு அரை மணி நேரம் டைம் கொடுங்கள் உங்களை நான் கன்வின்ஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருந்தார் சுபாஷ்கை. ஆனால் நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம் அவர் கன்வென்ஸ் ஆகி சென்றுவிட்டார் என்று கூறினார் பெப்சியுமா.
இவ்வாறு பெப்சி உமா பேசும் பொழுது நடிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லை என்பது மட்டும்தான் தெரிந்தது. இவ்வாறு தன்னை தேடி வந்தார்கள் நானே அவர்களின் மறுத்தேன் என்ற தற்பெருமை சற்றும் பெப்ஸி உமாவிடம் தெரியவில்லை .இதுதான் அவரை இந்த அளவிற்கு வளர செய்திருக்கிறது.
சினிமாவில் நடிக்காமலேயே அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நிறைந்து இருப்பவர் தான் பெப்சி உமா.