Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி , விஜய், அஜித் ஒரே மேடையில்.. கலைஞருக்காக ஒன்று கூடிய பிரபலங்கள்... எப்போது?

ரஜினி , விஜய், அஜித் ஒரே மேடையில்.. கலைஞருக்காக ஒன்று கூடிய பிரபலங்கள்… எப்போது?

1924ல் பிறந்து 2018 வரை வாழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் செய்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை.

- Advertisement -

தமிழ் மீது அதீத பற்று கொண்ட கலைஞர் அவர்கள் எழுதிய பாடல்கள் ,வசனங்கள் ,கதைகள் எல்லாம் இன்று நிலைத்து நிற்கிறது. வருகின்ற ஜனவரி 6-ம் தேதி கலைஞர் அவர்களின் 100 வது பிறந்த நாள் இதனை ஒட்டி கலைஞர் 100 என்று ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சி சென்னையில் நடத்தி இருக்கிறார்கள். இதனுடைய ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் எல்லாம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,உலக நாயகன் கமல், தளபதி விஜய் ,தல, அஜித், தனுஷ் ,சிம்பு, சூர்யா, கார்த்திக் போன்ற நடிகர்கள்
மணிரத்தினம், சங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், கே ஸ் ரவிக்குமார், போன்ற இயக்குனர்கள் ஏ ஆர் ரகுமான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் சமந்தா, த்ரிஷா ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ், பிரியங்கா அருள் மோகன் போன்ற நடிகைகள் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒன்று திரண்டு வந்திருக்கிறார்கள் கலைஞர் 100 என்ற கலை நிகழ்ச்சிக்கு.

- Advertisement -

இதில் இருக்கும் எல்லா பிரபலங்களுமே அவரவர் படப்பிடிப்புகளை ஒத்திவைத்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து எல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மண்ணை விட்டு சென்றாலும் மக்கள் நெஞ்சை விட்டு செல்லாமல் என்றும் கலைஞர் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்றுகள் ஆகும்.

இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 6-ம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்தநாளன்று ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular