தமிழ் சினிமாவில் 80களில் இருந்து இன்று வரை அவர் ஏற்றிய பாடல்கள் ஒருபோதும் தோல்வியடைந்ததில்லை என்றாள் அது இசைஞானி இளையராஜா இயக்கிய பாடல்களாகத்தான் இருக்கும்.
அந்த அளவிற்கு அவருடைய பாடல்கள் மீது ஒரு மோகம் ரசிகர்களுக்கு என்றுமே உண்டு. அவர் இயக்கிய பாடல்களால் கூட அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் வெற்றி அடைந்திருந்த சரித்திரம் எல்லாம் இவருக்கு உண்டு.
அப்படிப்பட்ட புகழினை உடைய இசைஞானி இளையராஜா சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் திருப்பாவை என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் “மல்யதா” என்ற பெயரில் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா தன்னைப் பற்றி ஒரு சில விஷயங்களை கூறினார்.
அவர் ஒரு சிவ பக்தனம். மேலும் அவர் மூன்று நாட்களில் மூன்று படங்களுக்கு பாடல்கள் அமைத்த அனுபவசாலி ஆனால் இப்படிப்பட்ட இவர் சற்றும் தற்பெருமை இல்லாத மனிதர் என்பது பின் அவர் கூறிய செய்திகள் விளக்கும்.
மக்களால் அவருக்கு கிடைத்த பெயர் “இசைஞானி” . இசை என்றால் கர்நாடக சங்கீதத்தை போன்ற உன்னதமான சங்கீதங்களின் முறையாக கற்று இருக்க வேண்டும். ஆனால் இளையராஜாவிற்கு கர்நாடக சங்கீதம் அந்த அளவிற்கு தெரியாதாம். அதனால் இந்த பெய ருக்கு நான் பொருத்தமுடையவனாய் என்று சந்தேகம் எனக்கு உண்டு என்று கூறினான்.
அதேபோல் நான் நிறைய மேடையில் ஹார்மோனியம் வாசித்திருக்கிறேன் ரசிகர்கள் என்னை ஆரவாரம் செய்து கைதட்டி பாராட்டுவார்கள் .ஆனால் இந்த கைதட்டல்கள் எல்லாம் எதற்கு கிடைக்கிறது என்று சிந்தித்துப் பார்த்த பொழுது தான் எனக்கு விடை தெரிந்தது. என்னுடைய இசையை விட இந்தப் பாடலுக்கு மெட்டு இசைப்பவர்களுக்காக தான் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் சொந்தம் என்பதை தெரிந்து கொண்டேன்
இசைஞானி என்ற கர்வம் இதன் காரணத்தினால் எனக்கு எப்பொழுதுமே கிடையாது என்று அந்த மேடையில் குறிப்பிட்டிருந்தார் இசைஞானி இளையராஜா.
உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் எப்பொழுதுமே தன்னை சாதாரணமானவன் என்று தான் எண்ணிக் கொள்வார்கள். அதன் காரணத்தினால் தான் அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இசைஞானி இளையராஜாவும் விலங்குகிறார்.