நேற்று சென்னையில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை தமிழ் திரைப்பட சங்கம் நடத்தியது. இதில் கலைஞரின் மகன் மற்றும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கோலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவுக்கு ரஜினி, கமல், ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களும் வந்திருந்தனர். விஜய் மற்றும் அஜித் ஷூட்டிங் காரணமாக வெளிநாட்டில் இருப்பதால் கலந்துக் கொள்ள இயலவில்லை. நிகழ்சியில் ரஜினிகாந்த் அவர்கள் கருணாநிதியுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது அவர் பேசிய ஒரு வாக்கியம் கமல்ஹாசனை தாக்கும் விதமாக அமைந்தது.
அவர் கமலை மையப்படுத்தி சொன்னாரா இல்லையா எனத் தெரியவில்லை, ஆனால் காலை முதல் சமூக வலைத்தளத்தில் அவர் தாக்கியதாகவே பரப்பி வருகின்றனர். நிகழ்ச்சியில் ரஜினி கருணாநிதியின் எழுத்துக்களைப் குறிப்பிட்டு, அவர் நபர்களுக்கு ஏற்றவாறு எழுதும் திறன் கொண்டவர் எனப் புகழ்ந்தார்.
மேலும், “ சிலபேர் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்றெல்லாம் யோசிக்கமாட்டார்கள். ஆனால் கலைஞர் கருணாநிதியோ அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும் பாமரனுக்கு பாமரனாகவும் பேசுவார். ” என்றார் ரஜினிகாந்த்.
இந்த வாக்கியங்களில் கருணாநிதியை பெருமையாக பேசும் நோக்கில் ஒரு பக்கம் கமலை கலாய்த்துள்ளார் என நெட்டிசன்கள் கிளப்பினர். அதுவும் கமலை அவர் முகத்திற்கு நேராகவே பேசியுள்ளார் என்பது தான் ஹைலைட் என்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் அதிக ஆற்றல் கொண்டவர் என்பது அனைவரும் அறிவர்.
ஆனால் சில மேடைகளில், உதாரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அவர் வித்தியாசமாக யாருக்கும் புறியாதவாறு பேசுவார். இதனை ஒரு குழு எதிர்த்து கலாய்க்கும். அவர்கள் தான் ரஜினியின் பேச்சையும் இவ்வாறு திருப்பிவிட்டுள்ளனர்.