தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் மட்டும் தான். இவர்களுடைய படம் திரைக்கு வந்தாலே திரையரங்கு உரிமையாளர்களுக்கு திருவிழா போல் இருக்கும். கடைசியாக இருவரும் இணைந்து பொங்கல் பண்டிகை அன்று மோதினர்.
விஜயின் வாரிசு திரைப்படமும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் 2023 பொங்கல் அன்று மோதியது. இந்த திரைப்படங்கள் வசூலை வாரி குவித்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் லியோ மிகப்பெரிய வசூலை பெற்றது.
ஆனால் அதன் பிறகு வந்த எந்த திரைப்படங்களும் போதிய அளவு வசூலை கொடுக்கவில்லை. தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் ஜிகர்தண்டா 2 ஓரளவுக்கு வெற்றியை பெற்றது.
எனினும் தீபாவளிக்கு கிடைக்க வேண்டிய வசூல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தத்தில் இருந்தனர். அதன் பிறகு டிசம்பர் மாதம் எந்த படமும் சரியாக போகாததால், பழைய திரைப்படங்களை வைத்து திரையரங்கு உரிமையாளர்கள் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை வெகுவாக திரையரங்கு உரிமையாளர்கள் நம்பி இருந்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி பல நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் அதை வைத்து வசூலை அள்ளிவிடலாம் என நினைத்தனர்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வந்தது. இந்த இரு திரைப்படங்களும் திரையரங்கு உரிமையாளர்களின் நஷ்டத்தை போக்கும் என கருதப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இரு திரைப்படங்களுமே சேர்த்து இதுவரை 90 கோடி ரூபாய் வசூலை கிடைத்திருக்கிறது.
இது திரையரங்கு உரிமையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் கடந்த முறை பொங்கல் பண்டிகை தமிழகத்தில் துணிவு 110 கோடி ரூபாயும் வாரிசு 150 கோடி ரூபாயும் வசூல் சாதனையை படைத்தது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 260 முதல் 300 கோடி ரூபாய் பொங்கல் பண்டிகை போது திரையரங்குகள் வசூலை பெற்றது.
ஆனால் தற்போது 100 கோடி ரூபாய் கூட தொட முடியாத அளவுக்கு படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக விஜய், அஜித் ஆகியோர் இல்லை என்றால் இதுதான் நிலைமையா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.