Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமா4 நாட்கள் விடுமுறையில் பொழுது போக்க ஓடிடியில் வரும் தரமான படங்கள்.. எங்கு எப்போது பார்க்கலாம்.....

4 நாட்கள் விடுமுறையில் பொழுது போக்க ஓடிடியில் வரும் தரமான படங்கள்.. எங்கு எப்போது பார்க்கலாம்.. !

2023ஆம் ஆண்டு கடைசியில் வெளியான படங்களின் ஓடிடி தேதிகள் நெருங்கிவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் இந்த வாரம் ஓடிடியில் களமிறங்குகிறது.

- Advertisement -

ஃபைட் கிளப் :

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஃபைட் கிளப். சில ஆண்டுகள் கிடப்பில் கிடந்து பின்னர் இயக்குனர் லோகேஷ் உதவியால் இப்படம் திரைக்கு தள்ளப்பட்டது. படம் முழுக்க சண்டைக் காட்சிகள் தான். ஹாட்ஸ்டாரில் ஜனவரி 27ஆம் தேதி வெளியாகிறது.

அதன் காரணமாகவும் டேவிட் பின்ச்சர் இயக்கிய ‘ ஃபைட் கிளப் (1999) ’ படத்தின் மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாகவும் இப்படத்திற்கு இந்தத் தலைப்பு வந்தது என படத்தின் ஹீரோ விஜயகுமார் கூறியிருந்தார். படம் சற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல ஆக்க்ஷன் திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

அனிமல் :

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திருப்தி டிமிரி, பப்லூ பிரித்விராஜ், பிரேம்.சோப்ரா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் அனிமல். கடந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படங்களில் ஒன்று இது. விமர்சன ரீதியாக ஒரு பக்கம் விறுவிறுப்பான படமாக இருப்பதாக கூறினர்.

- Advertisement -

மறுபக்கம் சமூகத்தில் இப்படம் தேவையற்றது எனவும் சிலர் கோபமாக பேசினர். ஆனால் சினிமாவை சினிமாவாக பார்த்தால் நிச்சயம் நல்ல படம் தான். அப்பா – மகன்கள் ஒடிஸியஸ் நடக்கும் குடும்பப் போர் தான் படத்தின் கதைப் களம். தியேட்டர் ரிலீஸில் 3:21 மணி நேரம் கொண்ட இப்படம் ஓடிடியில் கூடுதல் 8 நிமிடமோடு நெட்பிளிக்சில் நாளை முதல் ஒளிபரப்பப்படுகிறது.

ஏழு கடல் தாண்டி – இரண்டாம் பக்கம் :

ரக்ஷித் ஷெட்டி, ருக்மினி வசந்த் ஜோடியில் கடந்த ஆண்டு வந்த ஒரு மென்மையான காதல் கதை இப்படம். கன்னடத்தில் உருவான இப்படம் நல்ல வரவேற்புக்குப் பின் 4 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. காதலியை வசதியாக வைத்திருக்க விரும்பி பணத்திற்காக பொய்யான விபத்து கேஸில் ஜெயிலுக்கு உள்ளேப் போனார் ஹீரோ.

அவரை விரைவில் பெய்லில் எடுக்க ஒப்புக்கண்ட குடும்பம் பின்வாங்க 10 ஆண்டுகள் சிறையிலேயே காலத்தைக் கழிக்கிறார். படத்தின் இறுதியில் காதலிக்கு வேறு கல்யாணம் நடக்க சோகமான முடிவைக் கொண்டது படம். இதன் இரண்டாம் பாகத்தில் நாயகன் வெளியே வந்து காதலிக்கு நடக்கும் மற்றொரு சிக்கலைச் சரி செய்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்று மாலை அமேசான் பிரைமில் எந்த வித அறிவிப்பின்றி சர்ப்ரைஸாக வந்துள்ளது.

சாம் பகதூர் :

ஹிந்தியில் விக்கி கவிஷல், சானியா மல்ஹோத்ரா, பாத்திமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்தப் படம் இது. விமர்சன ரீதியாக மிகவும் நல்ல வரவேற்பைப் இப்படம் பெற்றது. குடியரசு தினத்தன்று நாளை ஜீ – 5 தளத்தில் இப்படம் வெளியாகிறது.

இந்த மூன்று படங்கள் தவிர பிற மொழிப் படங்களும் இந்த வாரம் வெளியாகிறது. நெட்பிளிக்சில் பேட்லேன்ட் ஹண்டர்ஸ், ஹாட்ஸ்டாரில் கர்மா காலிங் மற்றும் அம்சான் பிரைமில் எட்பட்ஸ் ஆகிய படங்களும் வருகிறது. ஏற்கனவே மோகன்லாலின் நேரு படம் ஹார்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. நான்கு நாட்கள் விடுமுறையில் பார்த்து மகிழ நல்ல என்டர்ட்டெயின்டமன்ட்கள்.

Most Popular