2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே 1500 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதித்த திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் எல். சி .யு வில் உள்ளதா என்ற சந்தேகம் பலர் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தது. திரைப்படம் வெளிவந்த பிறகு அது எல். சி. யு திரைப்படம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இந்த காலத்திலும் பலி கொடுப்பது போன்ற சீன்களை எல்லாம் வைத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அந்த ஃப்ளாஷ் பேக் உண்மை இல்லை என்பது போல் அமைப்பதற்கு அந்த சீனை எடுக்காமல் இருந்திருக்கலாமே என்றெல்லாம் பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில் தளபதி விஜயின் தந்தையான எஸ். கே சந்திரசேகர் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த இயக்குனருக்கு போன் செய்து முதல் பாதி அருமையாக இருக்கிறது என்று கூறினேன் .அவரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இரண்டாம் பாதி சிறப்பாக இல்லை. அந்த மாதத்தில் அப்படிப்பட்ட நம்பிக்கை எல்லாம் இல்லை. ஒரு தகப்பனே பிள்ளையை பலி கொடுக்க மாட்டார் என்று சொன்னேன். முதல் பாதி நல்லா இருக்குன்னு சொன்னது கேட்டுக் கொண்டிருந்தவர் இரண்டாம் பாதி சிறப்பாக இல்லை என்றவுடன் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் பிறகு பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார். அதேபோல அந்த திரைப்படம் வெளியான பிறகு அத்தனை பேரும் ட்ரோல் செய்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இயக்குனர் எஸ் .ஏ சந்திரசேகர் டைரக்டர் மற்றும் படத்தின் பெயர் குறிப்பிடாமல் கூறியது லியோ திரைப்படத்தை தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
தான் மகன் நடித்த திரைப்படமாக இருந்தாலும் அதன் உண்மையான கருத்தை விமர்சித்து இருக்கிறார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். ஒரு சாமானிய மனிதரைப் போன்று கண்ணோட்டத்தில் தான் அவர் அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.