Thursday, November 21, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த நடிகையின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும்.. காரணம்.. மேடையில் மிஷ்கின் பரபரப்பு பேச்சு.....

இந்த நடிகையின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க வேண்டும்.. காரணம்.. மேடையில் மிஷ்கின் பரபரப்பு பேச்சு.. !

இயக்குனர் மிஷ்கின் மேடை நிகழ்ச்சி என வந்தாலே சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுவார். நாள் போக்கில் அதை இணையத்தில் மீம் கிரியேட்டர்ஸ் டெம்ப்ளேட்டாக மாற்றிவிடுவர். அந்த வகையில் அண்மையில் அவர் மற்றொரு மேடை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

- Advertisement -

மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா தமிழ் சினிமாவில் ‘ சவரக்கத்தி ’ படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இப்படம் வெளியாகி 6 வருடங்கள் கழித்து ‘ டெவில் ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

மிஷ்கின் இயக்குனர் வேடத்தில் இருந்து நடிகராக அவ்வப்போது மாறுவார். தற்போது ஒரு படி மேலே போய் இசையமைப்பாளராக முன்னேறியுள்ளார். தன் சகோதரரின் படத்துக்கு பாடல்கள், இசை என இரண்டிலும் தன் பங்கைத் தந்துள்ளார். ஆதித்யா இயக்கியுள்ள டெவில் படத்தில் விதார்த், பூர்ணா, சுபஶ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்தப் படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய மிஷ்கின், “ பூர்ணாவைப் பார்க்கும் போதெல்லாம் அய்யயோ அடுத்த ஜென்மத்தில் நாம் இவருடைய குழந்தையாக பிறக்க வேண்டுமே எனத் தோன்றும். பூர்ணா மிகச் சிறந்த நடிகை. அதனை விட அவர் மிகவும் நல்லவர். ஒரு தாயாக இருந்து என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்பதற்காகவே நான் அவருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன். ” என்றார்.

- Advertisement -

மேலும், “ மற்ற இயக்குனர்களின் படங்களில் பூர்ணா நடிப்பாரா இல்லையா எனத் தெரியவில்லை, ஆனால் இனி என்னுடைய படங்களில் நிச்சயம் அவருக்கு இடம் இருக்கும் என்பதை உறுதி செய்கிறேன். ” என மிஷ்கின் பேசினார். மேடையிலேயே இயக்குனர் மிஷ்கின் அவர்களின் கையில் நடிகை பூர்ணா முத்தமும் கொடுத்தார். பூர்ணாவின் அன்பு அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது.

டெவில் திரைப்படம் இன்னும் 4 நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குபட்டி ராமசாமி படமும் டெவில் படமும் மோதுகிறது. இரண்டும் படங்களும் டிரைலரில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular