தமிழ் சினிமாவில் 90களில் பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இருக்கும் நடிகைகளின் நக்மாவும் ஒருவராவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கார்த்திக் ,பிரபு தேவா ,பிரபு, சரத்குமார் போன்ற பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
ஹைட், வெயிட், கலர் என்று எல்லாவற்றிலும் சிறந்த அழகியாக விளங்கிய நடிகை நக்மாவிற்கு சினிமாவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. இவர் இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் ஆவார்
ஆனால் இவர் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. இந்த நிலையில் இந்த கேள்வியை தன் கையில் எடுத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
49 வயதான நடிகை நக்மா கடந்த காலத்தில் அவர் கடந்து வந்த காதல் தோல்விகளால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் ஒரு சில பேட்டிகளில் கூறியிருக்கிறார் .
மேலும் அவர் கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் நடிகர் சரத்குமார் பழகியதாகவும் அதுவும் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதை போல் கிரிகெட் வீரர் கங்குலியடனும் நடிகை நக்மா காதல் வயப்பட்டு தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது .இவ்வாறான காதல் தோல்விகளால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆனால் இப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை நக்மா. இதைய அவர் அவருடைய நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகை நக்மாவை பார்த்து நக்மாவை திருமணம் செய்து கொள்ள இந்த வயதில் பெரிய நடிகர்கள் யாரும் வரப்போவதில்லை. அப்படி வந்தால் நக்மா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேலி செய்திருக்கிறார்.
மேலும் பருவத்திலேயே இந்த ஆசையை அவர் பயிர் செய்திருக்க வேண்டும் என்றும் நக்கலாக கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
பிரபலங்களின் வாழ்வில் எல்லை மீறி பேசுவதில் பயில்வான் ரங்க நாதனே மிஞ்ச யாருமே இல்லை .அந்த வகையில் தற்பொழுது நக்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதர்.