சினிமா வாழ்கையில் பெண்களுக்கு இன்னுமும் அங்காங்கே சிலர் தொல்லை கொடுத்து தான் வருகின்றனர். ஒரு சில நடிகைகள் மட்டுமே அதை உடனே தட்டிக் கேட்கின்றனர். பலர் சினிமா வாழ்கை கனவுக்காக மனதிலேயே புதைத்து விடுகின்றனர். அண்மையில் இது குறித்து நடிகை ஓவியா பேசியுள்ளார்.
களவாணி படத்தில் மிகவும் பிரபலமாகி மெரினா, கலகலப்பு, மதயானைக் கூட்டம், காஞ்சனா – 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஓவியா. இதனவிட பிக் பாஸ் தொடரின் மூலமாகவே அவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஓவியா ஆர்மி என அவருக்கு ரசிகர் பட்டாளமே இருந்தது.
தற்போது ஓவியா சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஓர் பேட்டி ஒன்றில், நடிகைகள் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். எந்த வித கேள்விக்கும் அச்சப்படாமல் தைரியமாக பதில் சொல்லியுள்ளார் ஓவியா.
ஓவியா கூறுதாவது, “ இந்த சினிமாவில் சில விஷயங்களில் சகித்துக் கொள்ளும் கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனை நினைக்கையில் வேதனையாக உள்ளது. என்னதான் சினிமா அடுத்தக் கட்டத்திற்கு சென்றாலும் இந்த சிக்கலுக்கு ஓர் தீர்வில்லை. அந்தந்த நேரத்தில் பெண்கள் அப்போதே தட்டிக் கேட்டால் நன்றாக இருக்கும். ”
“ நமக்கு பிடிக்காத எந்த எந்த விஷயத்தையும் செய்யவே கூடாது. அப்படி சகித்துக் கொண்டு பிறகு கிடைக்கும் பலன் அவசியமே இல்லை. பலர் இதனால் ஏமாற்றபபடுகிறார்கள். ஒரு சில இடங்களில் ‘ முடியாது ’ என திட்டவட்டமாக கூற வேண்டும். இதனை சொல்லும் தைரியம் வந்தாலே பிரச்சினையை தாண்டிவிடலாம். ” என பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசியுள்ளார் நடிகை ஓவியா.
சினிமாத் துறையில் ஓவியா குறிப்பிடும் போல் இன்னுமும் பெண்களுக்கு சில சிக்கல்கள் சிலரால் கொடுக்கப்படுகிறது. இதனை பெண்கள் எதிர்த்து கேட்டாலே ஒழிய எதிர்தரப்பு மக்களை திருத்த வாய்ப்பே இல்லை. நடிகை ஓவியா துணிச்சலாக சரியாக பேசியுள்ளார்.