பல மாதங்கள் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் அரசியல் வாழ்க்கை இன்று முதல் அதிகாரபூர்வமாக துவங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டப்பட்டு இன்று டெல்லியில் கட்சியைப் பதிவு செய்துள்ளார் விஜய். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.
2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோல் என்றும் இந்த ஆண்டு தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இன்று விஜய் வெளியிட்ட அறிக்கையில் கடைசி 2 வரிகள் அவரது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது முழு நேர அரசியலுக்காக மக்கள் பணிகளுக்காக சினிமாவில் இருந்து விஜய் விலகுவதாக கூறியுள்ளார். ஒப்பந்தத்தில் இருக்கும் படங்களை மட்டும் முடித்துவிட்டு முழு வீச்சில் அரசியல் பாதையில் பயணிக்க திட்டம் தீட்டியுள்ளார். அவரது பார்வை மிகச் சிறப்பாகவும் கொள்கையோடும் தெரிகிறது.
தற்போது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையில் ‘ தி கோட் ’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 50% நிறைவுப் பெற்றுள்ளது. அதற்குக் தளபதி விஜய் அடுத்தப் படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தச் செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் கசிந்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி நிறுவனம் தளபதி 69 படத்தைத் தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தை யார் இயக்க இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. சில வட்டாரங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் காணப்படுவார் எனப் பேசிக் கொண்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் மிகுந்த ஆசை.
ஏற்கனவே விஜய்யிடம் கதை கூறியுள்ளார். இன்று விஜய்யின் அரசியல் நுழைவைப் பாராட்டி கார்த்திக் சுப்புராஜ் போட்ட டுவீட் வைத்து அவர் தான் அடுத்த தளபதி பட இயக்குனர் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆசை வளர்த்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே விஜய் – கார்த்திக் சுப்புராஜ் பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.