இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பொதுவாக எந்த ஒரு சமூக விஷயத்தைப் பற்றியும் தனிப்பட்ட நபரை பற்றியும் பெரும்பாலும் எந்த கருத்துக்களையும் பதிவிடுவது இல்லை.
அவர் எப்பொழுதுமே எதார்த்தமான அமைதியான ஒரு மனிதர் ஆவார். தேவையில்லாத சர்ச்சைகளில் தானாக வந்து சிக்கிக் கொள்ளும் குணம் அவரிடம் கிடையாது. இசையில் மட்டுமே அவரின் நாட்டமும் மோகமும் உடையவர் ஏ ஆர் ரகுமான்.
இப்படிப்பட்ட இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆதரவாக ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சங்கி இல்லை என்று அவருடைய மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போது பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
பி ஜே பி க்கு ஆதரவாளர் போன்றே நடந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டதிலிருந்து யோகி ஆதித்ய காலில் விழுந்து வணங்கியது வரை எல்லாமே அவரை சங்கி என்று கூற ஏதுவாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் தற்பொழுது இசை புயல் ஏ ஆர் ரகுமான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மத நல்லிணக்கவாதி. கருப்பாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்பதை சாதித்து காட்டியவர்.
ஆன்மீகத்தையும் சினிமாவையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடிய குணமுடையவர் .அவருடைய திரைப்படத்திற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.