பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிகர் ரஜினியிடம் தொலைபேசியில் உரையாடி இருக்கும் சம்பவம் இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியின் தீவிர ரசிகராக விஜய் இருந்து வந்திருக்கிறார்.
அவருடைய பல படங்களில் ரஜினியின் தம்பி என்பது போல் பல பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போதுமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி அரசியல் பேச்சு எடுத்தவுடன் அவருடைய மார்க்கெட் சரிந்த நிலையில் விஜய் நம்பர் ஒன் நடிகராக உருவெடுத்தார்.
இதனால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் விவாதங்கள் ஏற்பட்டது. ஜெயிலர் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் இது நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே அவதூறு பரப்பும் வகையில் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில் தான் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பாராட்டி பேசினார். மேலும் தாம் சொன்ன காக்கா கழுகு கதை விஜய் வைத்து சொன்னது கிடையாது என்றும் விஜய்யின் வளர்ச்சி தமக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துகளையும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் தொலைபேசியின் மூலம் ரஜினியை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது இருவரும் அரசியல் மற்றும் சினிமா குறித்து சில மணி நேரம் பேசி இருக்கிறார்கள்.
அதில் அரசியலுக்கான பக்குவத்தை விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அரசியலில் மக்களுக்காக சிறந்து பாடுபட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ரஜினி கூறியுள்ளார். மேலும் சினிமாவில் இன்னும் எத்தனை படம் நடிக்க போகிறீர்கள்.
எப்போதும் முழுநேர அரசியலில் இறங்கப் போகிறீர்கள் என்பது குறித்து பல கேள்விகளையும் ரஜினி கேட்டு அறிந்திருக்கிறார். இரு நடிகர்களின் ரசிகர்களும் அண்மைக்காலமாக மோதி வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வு அமைதியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.