Tuesday, November 19, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜய்யை போலவே அதே ரூட்டில் கட்சியைத் துவங்கிய விஷால்.. என்னடா எல்லாரும் கிளம்புறீங்க என...

தளபதி விஜய்யை போலவே அதே ரூட்டில் கட்சியைத் துவங்கிய விஷால்.. என்னடா எல்லாரும் கிளம்புறீங்க என மக்கள் கருத்து

தளபதி விஜய்யின் அரசியல் என்ட்ரி தான் ஒரு வாரமாக சமூக வேகத்தில் வைரல் கன்டென்ட். பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லியில் ‘ தமிழக வெற்றி கழகம் ’ எனும் பெயரில் பதிவிட்டுள்ளார் தலைவர் தளபதி விஜய். இதற்கு ரசிகர்களும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு.

- Advertisement -

2026ஆம் ஆண்டு தேர்தலுக்காக முழு நேரமும் அரசியல் பணிகளுக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்கள் இடையே சற்று வருத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்னதான் விஜய்யின் அரசியல் வருகை சில அரசியல் வல்லுனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ஒரு தரப்பினர் ஏன் இந்த வேண்டாத வேலை எனத் தான் குறை கூறுகிறார்கள்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை மட்டம் தட்டுவதே சிலருக்கு வேலையாக உள்ளது. அது போல இன்று விஷால் புதிய இயக்கத்துடன் அறிவிப்பு தரவுள்ளார் எனும் செய்திக்கு உடனே ‘ விஐயைப் பார்த்து ஒருவர் ஒருவராக வருகிறார்கள் ’ என பேசத் துவங்கினர்.

- Advertisement -

ஆனால் விஷால் அரசியல் கட்சி எல்லாம் துவங்கவில்லை. தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக அவர் மற்றவுள்ளார். அதற்கான அறிவிப்பு தான் இன்று அவர் வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் போலவே விஷாலும் தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்காக உதவ உள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ இந்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அங்கீகாரம் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “ இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு ” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். ”

“ அடுத்த கட்டமாக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடம்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். ”

மேலும், “ நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். தேவைப்பட்டால் மக்களில் ஒருவனாக குரலும் கொடுப்பேன். ” எனக் கூறியுள்ளார் நடிகர் விஷால்.

Most Popular