தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ தி கோட் ’ ஆகும். அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் தற்போது வரை 70% பணிகளை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இப்படம் டைம் டிராவல் ஆக்ஷன் வகையில் உருவாகிறது.
இப்படத்துக்கு இடையே தளபதி விஜய் தன் அரசியல் பணிகளையும் பார்த்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மக்கள் பணிகளுக்காக கோட் படத்துடன் மற்றொரு படம் செய்து விட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக கூறியுள்ளார்.
அதனால் எப்போதும் இல்லாத அளவு எஞ்சி இருக்கும் இரண்டு படங்களை கொண்டாடித் தீர்துவிடுவர் ரசிகர்கள். கோட் திரைப்படத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தரமான ஒரு செய்கையை வெங்கட் பிரபு & கோ மேற்கொண்டு வருகிறது. புது தொழில் நுட்பத்தால் சினிமா அடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டுள்ளது.
அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில் நுட்பத்தால் கோட் படத்தில் கொண்டு வர வெங்கட் பிரபு குழு முடிவு செய்துள்ளது. இதற்காக கேப்டன் குடும்பத்தினரிடம் அவர்கள் அனுமதியும் பெற்றுவிட்டார்கள். எல்லா பணிகளும் முடிந்த பிறகு எடிட் செய்ததை காட்டிவிட்டு படத்தில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் விஜயகாந்த் குடும்பத்தினர்.
வெங்கட் பிரபு எப்போதும் அவரது படங்களில் வித்தியாசமாக டிரெண்ட்டில் இருப்பதைச் செய்து அசத்துவார். அந்த வகையில் இந்தப் படத்தில் மறைந்த நடிகரின் நடிப்பையும், விஜய்யின் இளமை உருவத்தையும் கொண்டு வருகிறார். இது படத்தின் மீது உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விஜய்யின் ஆரம்ப காலத்தில் ஒன்றாக நடித்த கேப்டன் அவரின் இறுதி சினிமா பயணத்திலும் தொடர்கிறார்.
தமிழ் சினிமாவில் AI தொழில் நுட்பத்தை அடுத்தடுத்து பயன் படுத்தத் துவங்கியுள்ளார்கள். முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் மறைந்த பாடகர்களின் குரலில் புதிய பாடல்களை வெளியிட திட்டமிதுள்ளாக அறிவிப்பை வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது.