தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியும் நடிகர் விஜய் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்பது தொடர்பாக டைம்ஸ் குரூப் சார்பில் தமிழக மக்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் மக்கள் என்ன பதில் அளித்து இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம். விஜய் சினிமாவில் சாதித்தது போல் அரசியலிலும் சாதிப்பாரா என்று மக்கள் மத்தியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 69.4 சதவீதம் பேர் ஆம் நிச்சயம் சாதிப்பார் என்று பதில் அளித்து இருக்கிறார்கள்.
இல்லை என்று 21.4 சதவீதம் பேர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். விஜய்க்கு ஆண்களை விட பெண்களே அதிக அளவு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. விஜய்க்கு 45 சதவீத ஆண்களும், 55 சதவீதம் பெண்களும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
இதேபோன்று வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்க்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது இதற்கு ஆம் என்று 62% பேரும், இல்லை என்று 26 சதவீதம் பேரும், முடிவு எடுக்கவில்லை என 12 சதவீதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்க்கு ஆதரவளித்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. 21 லிருந்து 30 வயது உடைய மக்களின் 36 சதவீதம் பேர் நடிகர் விஜய்க்கு வாக்களித்து இருக்கிறார்கள். 31 -40 வயது உடையவர்களில் 24 சதவீதமும் 41 லிருந்து 50 வயது உடையவர்கள் 20% பேரும் 51- 60 வயது உடையவர்களில் 11 சதவீதமும் 61 முதல் 70 வயது உடையவர்களில் 9% பெரும் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
இதேபோன்று விஜய் தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நேர்மறையான நல்ல பதில்களை வந்திருக்கிறது. இதனால் விஜய்க்கு இது நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது எனினும் விஜய் தன்னுடைய அரசியல் நிகழ்வை எப்படி எடுத்துச் செல்ல போகிறார் என்பது பொறுத்தே அவருடைய வெற்றி அமையும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.