Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநான் மாஸ் ஹீரோ ஆக மாட்டேன் வாய்ப்பே இல்லை 24 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய்...

நான் மாஸ் ஹீரோ ஆக மாட்டேன் வாய்ப்பே இல்லை 24 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் கொடுத்த பேட்டி

தமிழ் சினிமாவின் மகுடம் சூடா மன்னனாக வலம் வருகிறார் தளபதி விஜய். இவர் தற்பொழுது அரசியலுக்கு வந்தது தமிழ் மக்களை மிகப்பெரும் பரபரப்பில் ஆழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திரும்பும் இடமெல்லாம் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என்ற கேள்வி தான் நிறைந்து இருக்கிறது. அந்த அளவிற்கு அனைவரின் மத்தியிலும் விமர்சனத்தையும் ,கருத்துக்களையும், ஆதரவையும் ,எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது தற்பொழுதையே இந்த நிகழ்வு.

இந்த நிலையில் தற்பொழுது தளபதி விஜய் பேசிய பழைய காணொளிகள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதைப் பற்றி 10 வருடத்திற்கு முன்பு கூறிய காணொளி எல்லாம் வெளியிடப்பட்டு பிரபலமானது. அதை போல் தற்பொழுது 1999இல் நடந்த ஒரு தனியார் பெட்டியில் தளபதி விஜய் பேசிய ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

தளபதி விஜய் அதில் மிகவும் சாதாரணமான மனிதராகவும் நடிகர் விஜயாக மட்டுமே அதில் அவரை பார்க்க முடிந்தது.  தளபதி விஜயாக அவர் ஆகப்போவது அன்று அவருக்கு தெரிவது போன்ற எந்த அடையாளமும் அந்த வீடியோவில் நாம் காண முடியாது.

- Advertisement -

அந்த வீடியோவில் தளபதி விஜய் மாஸ் ஹீரோக்கள் என்ற இமேஜில் ஒரு ஹீரோ சிக்கிக்கொண்டால் ரொம்ப கஷ்டம். அவரால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாது. ஒரே ஸ்டைலில் தான் அவர் நடிக்க வேண்டியது இருக்கும். அதுவே அந்த இமேஜ் இல்லை என்றால் நிறைய தோற்றத்தில் நடிக்கலாம் நமக்கு அதில் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

நான் ஒருபோதும் மாஸ் ஹீரோ இமேஜஸ் சிக்கிக் கொள்ள மாட்டேன் என்று கூறிய நடிகர் விஜய் தான் தற்பொழுது தமிழ் சினிமாவின் தளபதி விஜயாக அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார் .இது அவரே  எதிர்பாராத ஒரு மாற்றம்தான்.

மேலும் அந்த பேட்டி நடைபெற்ற 1999க்கு முன்பு 1998 இல் அவர் நடித்த பிரியமுடன் திரைப்படத்தில் அவர் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தை அவர் தேர்ந்தெடுத்து நடித்தது ஒரே காதல் கதையாகவே நடித்து வருகிறீர்களே என்று பலரின் விமர்சனத்திற்காக தான் பிரியமுடன் போன்ற திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்தேன் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் தளபதி விஜய்.

அவர் கூறியது போன்று தற்பொழுது மாஸ் ஹீரோ இமேஜில் முதலிடம் பிடித்திருக்கும் தளபதி விஜய் நடிக்கும் எல்லா திரைப்படங்களின் அவர் பார்ப்பதற்கு மாஸாக இருப்பது அவர் கூறியதை உண்மையாகிவிட்டது. அவர் அரசியலிலும் மாஸாக இருக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular