நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படம் இயக்கப் போவதான தகவல் சமீபத்தில் வெளிவந்தது.
2020 இல் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் ஓய்வில் இருந்தார். தற்பொழுது மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்க இருக்கும் எஸ் கே 23 திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு கம் பக் கொடுக்க இருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
தீனா ,கஜினி, ஏழாம் அறிவு ,துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் .இவர் தற்பொழுது எஸ் கே உடன் கைகோர்த்து இருப்பது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பூஜை இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேறியது அதைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் நடக்கத் தொடங்கிவிட்டது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் ஏ ஆர் முருகதாஸுடன் இந்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இடம் இந்த திரைப்படம் குறித்து கேட்கப்பட்டதற்கு இது கஜினி போன்று சுவாரசியமான திரைப்படம் ஆகும் .
இது திரைப்படத்தில் கதாநாயகருக்கு வித்தியாசமான பேச்சு மொழி நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சில பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அதே போல் இத்திரைப்படத்தினுடைய கதாநாயகி மிகவும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கன்னட சினிமாவை கலக்கியசப்த சாகரடாச்சே எல்லோர் – சைட் பி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ருக்மணி வசந்தி தேர்வு செய்தேன் என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
கஜினி திரைப்படத்தில் முதல் பாதி முழுதும் காதல் காட்சிகள் இரண்டாம் பாதியில் சண்டை காட்சிகளும் இருப்பது போல் இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்றாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் அளவிற்கு இதில் நிறைய காதல் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் என்று எ ஆர் முருகதாஸ் ஒரு குறிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் இந்த திரைப்படம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிற்கு மிகப் பெரிய கம்பாக் காக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.