Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஇசையமைப்பாளர் தினா செய்த பண மோசடி.. உண்மையை உடைத்த கங்கை அமரன்..!

இசையமைப்பாளர் தினா செய்த பண மோசடி.. உண்மையை உடைத்த கங்கை அமரன்..!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்று இசையமைப்பாளர்கள் சங்க தேர்தலில் பத்திரிகையாளர்களிடம்
தற்பொழுது சங்கத் தலைவராக இருக்கும் இசையமைப்பாளர் தினாவை பற்றி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

பிரபல பாடகியும்  இசைஞானி இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி இழப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று பேசத் தொடங்கினார் கங்கை அமரன் .என்னுடைய இந்த இடத்தில் இளையராஜா தான் அமர்ந்து பேசி இருக்க வேண்டும் .அவருக்கு பதில் இன்று நான் பேச வந்திருக்கிறேன்.

சங்கத் தலைவராக இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை தான் இருக்க முடியும் . அதுதான் விதி ஆனால் தலைவர் தினா நான்கு ஆண்டுகளாக அந்த பதவியில் இருக்கிறார் . தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு இதுவரை நடந்த தேர்தல்களை வெற்றி பெற்றார். இந்த முறையும் அது போல் நடப்பதற்கு முயற்சி செய்கிறார் ஆனால் இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் நிறைய பண மோசடி செய்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பலருடைய கையெழுத்தை போட்டு பண மோசடி நடந்திருக்கிறது. தற்பொழுது மறைந்த பவதாரணையின் கையெழுத்தை கூட இட்டு 80 லட்சத்திற்கு மேல் பணத்தை மோசடி செய்திருக்கிறார் இயக்குனர் தினா.

- Advertisement -

இவர் பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநில தலைவராக இருக்கிறார்.
அதனால் இவரைப் பற்றி பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையுடன் முறையிட்டேன் ஆனால் அதற்கெல்லாம் தினா சலிக்கவில்லை.

- Advertisement -

இவெற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த முறை இந்த  தேர்தலில் போட்டியிட கூடாது என்று கூறினோம் ஆனால் அதையும் மீறி அவர் தற்பொழுது தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தினாவை பற்றி கங்கை அமரன் அளித்த பேட்டி அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையும் மீறி இந்த முறையை அவர் ஜெயிப்பாரா என்ற கேள்வி தற்பொழுது எழுந்திருக்கிறது.

Most Popular