தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடித்தார் . இதில் அவருடைய நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் பெயர் பெற்றார் .அதற்குப் பிறகு இவர் சண்டக்கோழி 2 ,சர்க்கார் ,இரவின் நிழல் ,கொன்றால் பாவம் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவர் வில்லியாக நடித்தார். அதிலும் அவருடைய நடிப்பிற்கு நிறைய விருதுகளும் வழங்கப்பட்டது.
தற்பொழுது நடிகர் தனுஷ் அவருடைய தயாரிப்பில் தானே நடித்து வரும் ராயன் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மார்ச் மாதம் 1ஆம் தேதி நடிகை வரலட்சுமிக்கு மும்பையில் நெருங்கிய நண்பர்களும் ,தந்தை சரத்குமார் ,பெற்ற தாய் சாயா ,ராதிகா சரத்குமார் அவரின் மகள் ரயான் போன்ற முக்கிய உறவுகளோடும் சிம்பிளாக ஒரு ஹோட்டலில் அவருடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினரோடும் தான் கட்டிக் கொள்ளப் போகும் கணவரோடும் நடிகை வரலட்சுமி எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை வரலட்சுமி மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபரான நிக்கோலஸ் சாஜ்தேவ் என்பவரை தான் திருமணம் செய்ய போகிறார். இவர் நடிகை வரலட்சுமிக்கு 17 வருடமாக நண்பராக இருந்திருக்கிறார் .தற்பொழுது இவர்களின் பந்தம் திருமணத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுடைய திருமணம் இந்த வருட இறுதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது .இவர்களுடைய திருமண செய்தியை விரைவில் அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் வரலட்சுமி நிக்கோலஸ் சாஜ்தேவ் தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இதற்கு முன்பு யார் யாருடன் சுற்றி இருக்கிறார் என்ற பட்டியலை பார்க்கலாம். வரலட்சுமி நடிகர் விஷாலின் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. நடிகர் சரத்குமாரை எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் விஷால் நின்ற போது சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் விஷால் உடன் தான் நட்பில் இருந்தார்.
இருவரும் பலமுறை டேட்டிங் சென்று இருக்கிறார்கள். விஷால் வரலட்சுமி ஆகியோர் சுற்றி திரிவதற்கு நடிகர் சரத்குமாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த நிலையில் நடிகர் விஷால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்த வரலட்சுமி சரத்குமார் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதற்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் நடிகர் சிம்புவுடன் மிக நெருக்கமான நட்பில் இருந்தார்.
போடா போடி திரைப்படம் தான் முதல் படம் என்பதால் அவருக்கும் சிம்புவுக்கும் நல்ல ஒரு நட்பு ஏற்பட்டது. எனினும் அது காதலாக மாறவில்லை. இடையில் சிம்புவை தான் வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் எல்லாம் கிளம்பின.
ஆனால் அது வதந்தியாகவே ஆகிவிட்டது இதேபோன்று வரலட்சுமி சரத்குமார் ஒரு கிரிக்கெட் வீரருடன் சுற்றி தருவதாக செய்திகள் வெளியானது ஆனால் அதுவும் வதந்தி தான். இந்த நிச்சயதார்த்தம் வரலட்சுமி சரத்குமாருக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.