Friday, November 29, 2024
- Advertisement -
Homeசினிமாகோட் திரைப்படத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா..? குஷியான ரசிகர்கள்

கோட் திரைப்படத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா..? குஷியான ரசிகர்கள்

தளபதி விஜய் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஏற்கனவே பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அவர் அரசியலுக்கு சென்றாலும் இவர் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படமும் இதற்கு அடுத்தது நடிக்க இருக்கும் விஜயின் 69 வது திரைப்படம் தான் நடிகர் விஜய் நடிகனாக பார்க்கக்கூடிய திரைப்படங்கள் ஆகும் என்பதால் ரசிகர்கள் திரைப்படங்களுக்கு பெரும் அளவில் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இருந்த போதிலும் இந்த திரைப்படத்தில் எந்த குறையும் இருந்துவிடக் கூடாது. மாஸ் ஹிட் ஆக இந்த திரைப்படம் அமைய வேண்டும் என்பதில் படக்குழுவினர்களும், நடிகர்களும், இயக்குனரும் தெளிவாக இருக்கிறார்கள். அதற்காக அவர்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். நடனம், பாடல், நடிப்பு, வசனம், லொகேஷன் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அமைத்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மோகன் ,சினேகா, லைலா என்று ரசிகர்களால் பெரும் அளவில் வரவேற்கப்பட்டு உச்சத்தில் இருந்த நடிகர்களை எல்லாம் ஒன்று சேர்த்து நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

- Advertisement -

இது போதாது என்று சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் இடம்பெற்ற குறிச்சி மடத்தை பேட்டி பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த சேகரை தற்பொழுது கோட் திரைப்படத்தின் நடன இயக்குனராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் பாடலுக்கு அதில் வந்த நடிகர் மகேஷ்பாபு ,நடிகை ஸ்ரீ லீலா மற்றும் நடிகை பூர்ணா ஆகிய அவர்களின் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது. இன்றும் ரசிகர்கள் இதை கொண்டாடி தான் வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்த பாடல் பெயர்  பெற்றது அவர்களின் நடனத்தால்தான். அப்படி ஒரு நடனத்தை கற்றுத்தந்த நடன இயக்குனர் சேகர் தான் தற்பொழுது தளபதி விஜய்க்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறாராம். இந்தத் திரைப்படத்திற்காக தளபதி விஜய் நடிகர் மகேஷ்பாபுவிடம் நேரடியாக பேசி சேகரை வரவழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதியின் ஆட்டத்தை சொல்லவே வேண்டாம். இதற்கிடையில் மகேஷ் பாபுவை இந்த அளவிற்கு ஆட வைத்தவர் தளபதி விஜய் எப்படியெல்லாம் ஆட வைக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தலை தூக்கிவிட்டது.

மேலும் இந்த பாடலை ரஷ்யாவில் எடுக்க இருப்பதாகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த பாடல் அமைய இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular