விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. குரங்கு பொம்மை படத்துக்குப் பின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் இரண்டாவது படம் எந்தவித சத்தமின்றி வெளியாகி சம்பவம் செய்துள்ளது. இப்போது வரை விமர்சன & வசூல் ரீதியாக இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படமாக இது அமைந்துள்ளது.
பார்வையாளர்களை ஒரு நொடி கூட கவனம் திருப்பாமால் முழுவதுமாக படத்தில் வைத்ததற்கு திரைக்கதை முக்கிய காரணம். இத்தகு நல்ல விமர்சனங்களைப் பெற்ற படத்தை, நான் பார்க்க மாட்டேன் என பாடகி சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் சின்மயி, ” மகாராஜா படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது. இதனால் நான் இந்த படத்தை பார்க்கப் போவதில்லை. ” எனப் பதிவு. சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் காரணமாக புகார் செய்தார். தன் மீது அவதூறான புகார் அளித்துள்ளார் என வைரமுத்து பதிலுக்கு புகார் செய்ய, சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினர்.
அதன் பின்னர் அவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்யவில்லை. தன் டுவிட்டர் பதிவில் சின்மயி மேலும் வைரமுத்து & யூனியன் பற்றி பேசியுள்ளார். ” உலகிலேயே தமிழ் சினிமா மட்டும் தான் அவர்களுக்கு பிடித்த ஒருவருக்காக புகார் செய்தவரையே தடை செய்துள்ளது. ” எனவும் குறிப்பிட்டு தன் கோபத்தைக் காட்டியுள்ளார்.
சின்மயி, இந்தப் படத்தை பார்க்காமல் எதிர்ப்பு தெரிவித்ததை சிலர் ஆதரித்து வருகிறார்கள். ஒரு நாள் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். என்னதான் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் அண்மையில் லியோ படத்தில் தடைகளைத் தாண்டி சின்மயியை வைத்து எந்த வித சிக்கலும் இல்லாமல் டப்பிங் செய்தார் லோகேஷ் கனகராஜ்.