தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியானது. இதனால் உலகம் முழுவதும் வாழும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்தி சேனல்கள் அவர்களது இஷ்டத்துக்கு நடிகர் விக்ரம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டனர். பிரபல சேனல் ஒன்று விக்ரமின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒளிபரப்பு செய்தது. இது நடிகர் விக்ரமின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அன்று மாலையே மருத்துவ அறிக்கையை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, நடிகர் விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி மட்டும் இருந்ததாகவும் அவருடைய உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டு மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் விளக்கம் அளித்தது. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் இருந்ததால் அன்று வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசர் விழாவில் பங்கேற்கவில்லை .
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம், உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீநிதி செட்டி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தை வாங்கி வெளியிட உள்ள உதயநிதி ஸ்டாலின் , விக்ரம் திரைப்படம் கமல் சாருக்கு எப்படி ஒரு வெற்றியை தந்ததோ அதேபோல் கோப்ரா திரைப்படம் விக்ரமுக்கு வெற்றியை பெற்று தரும் என்று உறுதியளித்தார். இதன் பிறகு ஏ ஆர் ரஹ்மான் கோப்ரா பட பாடலை மேடையில் பாட அரங்கமே அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், தமக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பிய விதத்தை கடுமையாக கிண்டல் செய்தார்.
#Chiyaan Thug
— Yuva cine (@Cinema11552507) July 11, 2022#Vikram #Cobra #ponniyanselvan pic.twitter.com/azEQzem7Yu
“நாம் என்னென்னவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒன்னும் இல்ல ” என்று குறிப்பிட்ட விக்ரம், டிவி சேனல்கள் செய்தி வெளியிட்ட விதத்தை மேடையில் பேசி ரசிகர்களை கலகலக்க வைத்தார். நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அவரே கோபுரா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்வார் என்று டிவி சேனல்கள் சொன்னாலும் சொல்லும் என்று பேசி கிண்டல் செய்தார். தமது விஷயத்தில் தொலைக்காட்சி சேனல்கள் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டதை மறைமுகமாக விமர்சனம் செய்து நடிகர் விக்ரம் தனது பேச்சை நிறைவு செய்தார்.