Sunday, December 1, 2024
- Advertisement -
Homeசினிமாஇதை பார்த்தீங்களா ? பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நம்ம சிவாங்கி அடிச்ச லூட்டி !

இதை பார்த்தீங்களா ? பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நம்ம சிவாங்கி அடிச்ச லூட்டி !

தமிழகத்தின் செல்லக் குரல் தேடல் என்ற சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின் குக் வித் கோமாளியில் வந்து அனைவரின் செல்லப் பிள்ளையாக மாறியவர்தான் சிவாங்கி.. சிவாங்கி செய்யும் லூட்டிக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி செம ஹிட் ஆனது. இதன் பிறகு சிவாங்கிவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. குக் வித் கோமாளியில் இடம்பெற்ற அஸ்வினும் சிவாங்கி ஜோடியும் ரசிகர்களால் மிகவும் போற்றப்பட்டது. இதன் மூலம் சிவாங்கி அவருக்கு என தனி youtube சேனலை தொடங்கி , அவர் வாழ்க்கையில் தினம்தோறும் நடைபெறுவதை வீடியோவாக போட்டு வருகிறார்.

- Advertisement -

அண்மையில் சிவகார்த்திகேயன் படமான டானிலும் சிவாங்கி நடித்துள்ளார். இந்த நிலையில் சிவாங்கி தாம் மிகப்பெரிய பிரபலம் ஒருவரை சந்தித்ததாகவும் அது குறித்து தகவலை வெளியிடுகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு தான் அது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் என்று தெரிந்தது. ரன்பீர் கபூர் நடித்து வரும் 22 ஆம் தேதி திரைக்கு வரும் திரைப்படம் சம்சீரா. ஹிந்தி, தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை கரண் மல்ஹோத்ரா இயக்கியுள்ளார். கே ஜி எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாகவும், வாணி கபூர் ஜோடியாகவும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் சம்சீரா படத்தின் தமிழ் டப்பிங்கை பிரபலப்படுத்துவதற்காக நடிகர் ரன்வீர் கபூர் களமிறங்கியுள்ளார். இதற்காக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சிவாங்கியை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது சிவாங்கி சில கேள்விகளை கேட்க அதற்கு ரன்வீர் கபூர் பதில் அளித்தார். தனக்கு பிடித்த நடிகரை நேரில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சிவாங்கி குறிப்பிட்டுள்ளார். தனது படத்தை தமிழில் பிரபலப்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் ஒருவர் சிவாங்கியை தேடி வந்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Most Popular