2022 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் முடிவடைந்து விட்டது. கொரோனாவுக்கு பிறகு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்கள் எவ்வளவு வசூல் பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். திரை துறை முன்பு போல இயங்குமா இல்லை? ஓ டி டி ஆதிக்கம் செலுத்துமா? என்ற சந்தேகமும் இருந்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் டாப் 10 வசூல் பெற்ற திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் தியேட்டர் தொழில் என்றுமே அழியாது என்பதை நிரூபித்து விட்டது. நடபாண்டின் வசூல் விக்ரம் திரைப்படம் போல் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான டாப் கன் மேவ்ரிக் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் சூப்பர் ஹீரோ திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ் மல்டி வெர்ஷன் ஆப் மேட்னஸ் திரைப்படம் 988 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனை செய்துள்ளது.
ஜுராசிக் பார்க் டோமினியான் திரைப்படம் 942 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனை செய்துள்ளது. நான்காவது இடத்தில் பேட்மேன் திரைப்படம் 778 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் ஈட்டி உள்ளது.ஐந்தாவது இடத்தில் மினியான் ரைஸ் ஆப் குரு திரைப்படம் 670 மில்லியன் அமெரிக்க டாலரும், தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படம் 662 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலையும் ஈட்டி உள்ளது. ஏழாவது இடத்தில் வாட்டர் கெட் பிரிட்ஜ் திரைப்படமும் , எட்டாவது இடத்தில் பென்டாஸ்டிக் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாகமும் ,ஒன்பதாவது இடத்தில் சோனிக் 2வும், 10வது இடத்தில் அன்சார்டட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளன. இந்த வசூல் அனைத்தும் திரைத்துறை மீண்டு எழுந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இன்னும் ஐந்து மாதம் எஞ்சியுள்ள நிலையில் உலகம் முழுவதும் பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அவதார் ஃபுல் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.