தமிழ் சினிமாவில் எந்த நடிகர்கள் சிறந்தவர்கள் என அந்தந்த ரசிகர்களிடையே கடும் மோதல் அவ்வப்போது நடைபெறும். இது எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்து தற்போது உள்ள சிம்பு தனுஷ் காலம் வரை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் யார் என்ற சண்டையும் அவ்வப்போது நடந்து வருகின்றது. ஒரு சிலர் இளையராஜா தான் சிறந்த இசையமைப்பாளர் என்றும் இன்னொரு சிலர் ஏ ஆர் ரகுமான் தான் சிறந்தவர் என்றும் மற்றும் சிலர் எம்.எஸ் விஸ்வநாதன் தான் சிறந்த இசையமைப்பாளர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது தற்போது இது ஏ ஆர் ரகுமான் இளையராஜா ரசிகர்களின் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஜேம்ஸ் வசந்த் வெளியிட்டுள்ள பதிவில், 60-ல் தொடங்கி இசை ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த மெல்லிசை மன்னர் MSV-ன் உச்ச காலத்தில், 76-ல் இசைஞானி இளையராஜா அதிரடியாக உள்ளே வருகிறார். இசையின் அடுத்த பரிமாணத்தைக் காட்டுகிறார்.
அவர் கோலோச்சிக் கொண்டிருந்தபோது 92-ல் புயலாக உள்ளே வருகிறார் ரஹ்மான், திரைப்பட இசையின் எல்லா முகங்களையும் பார்த்துவிட்டதாக நினைத்துகொண்டிருந்த ரசிகர்களின் எண்ணத்தைத் தகர்த்தார்.
1960 – 76 = 16 ஆண்டுகள் எம்.எஸ்.வியும்,
1976 – 92 = 16 ஆண்டுகள் இளையராஜாவும்,
1992-2022 = 30 ஆண்டுகள் ஏ.ஆர்.ரஹ்மானும் தொடர்ந்து முதலிடத்தில் என்று ஜேம்ஸ் வசந்த் குறிப்பிட்டார்.
இந்தப் பதிவுக்கு இளையராஜா ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளையராஜா என்றுமே நம்பர் ஒன் என்றும் அவரை ஏ ஆர் ரகுமான் உடன் ஒப்பிட்டு செய்யக்கூடாது என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்து வருகிறார், ஆனால் இளையராஜா தற்போது ஹிட் பாடல்கள் கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர். ஏ ஆர் ரஹ்மானுக்கு எப்படி நம்பர் ஒன் இடம் கொடுத்தீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க , அதற்கு ஜேம்ஸ் வசந்தன், மார்க்கெட் வைத்துதான் என்று பதில் அளித்துள்ளார் .இன்னும் சிலர் அரசியல் காரணங்களுக்காக இளையராஜாவை ஜேம்ஸ் வசந்த் மட்டம் தட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளனர்.