தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது உழைப்பால் சிறந்த நடிகரான தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் அதர்வா. கடந்த 2019 ஆம் ஆண்டின் ஷாம் ஆண்டனி இயக்கத்தில் அதர்வா நடித்த 100 என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தற்போது ஷாம் ஆண்டனி இயக்கத்தில் அதர்வா ட்ரிகர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களுக்கு இசையமைத்து வெற்றி பெற செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான் இவரே அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சாம் ஆண்டனி இயக்கிய அதர்வா நடித்த 100 திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக இருந்த கிருஷ்ணன் வசந்த் என்பவர் தான் ட்ரிக்கர் படத்திலும் பணியாற்றி இருக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரிகர் திரைப்படத்தின் டீசர் ஏழு மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் அந்த டீசர் ரசிகர்களிடையே கவனம் பெறவில்லை. ட்ரிக்கர் டீசரில் அதர்வா ஒரு ஆக்ஷன் ஹீரோ போன்று ஸ்டைலிஷ் ஆக காட்சி அளிக்கிறார். இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனம் ஒரு மகன் தான் தந்தை தோற்பதை ஒருபோதும் விரும்ப மாட்டான் என்றும் தந்தையை தான் தோற்க விடமாட்டேன் என்றும் அதர்வா தன் தந்தையான முரளியை பார்த்து கூறுவது போல் இயக்குனரால் அமைக்கப்பட்டு இருப்பது புதுமை. இந்த டீசரில் இறுதி காட்சியில் துப்பாக்கி குண்டு பாய்வது போல் இருப்பதால், இது ஒரு ஆக்ஷன் ஃபிலிம் ஆக இருக்கும் என்று சொல்கிறது.
இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகாமல் தாமதமானது .வருகின்ற செப்டம்பர் மாதம் ட்ரிக்கர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் அதர்வா நடித்த குருதியாட்டம் திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில காலமாக அதர்வா நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தாமதமானது ஆனால் இப்பொழுது குருதி ஆட்டம் இதைத்தொடர்ந்து ட்ரிகர் திரைப்படம் என அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அதர்வாவிற்கு சினிமாவில் நல்ல நேரம் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. முன்னணி நடிகர்களின் வரிசையில் அதர்வாவும் இடம்பெறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.