விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைதபல்லி இயக்கும் வாரிசு படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இன்னும் 2 பாட்டுகள் மட்டுமே பாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் 27ஆம் தேதியுடன் மீதமிருக்கும் படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். தீபாவளி திருநாள் அன்று படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் கூறிவிட்டார் என்பதால் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடையும் மறுகணமே நடிகர் விஜய் ஓய்வு பெறுவதற்காக வெளிநாடு செல்லவுள்ளார். ஏற்கனவே இயக்குனர் வம்சிக்கு அளிக்கப்பட்ட நாட்களைத் தாண்டி கூடுதலாக விஜய் நடித்துள்ளாராம். இந்நிலையில் அவர் ஓய்வை நாடி வெளிநாடு பயணிக்கிறார்.
வாரிசு படத்தை விட ரசிகர்கள் அதிகம் காத்திருப்பது விஜய்யின் 67வது படத்திற்கு தான். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் பம்பாய் கேங்ஸ்டராக வலம் வரவுள்ளார். அதோடு அவருக்கு எதிராக 3/4 நட்சத்திர நடிகர்கள் வில்லன்களாக நடிக்க இருக்கின்றனர். தளபதி 67 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடை கட்டத்தை எட்டிவுள்ள நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு அதிகம் காத்திருந்தாலும் வெகு நாட்கள் கழித்து முழுக்க முழுக்க குடும்ப கமர்ஷியல் படத்தில் அவர்களது நாயகனைக் பார்பத்திலும் ஆசையாக இருப்பர். மேலும் அவரின் விண்டேஜ் பாடலான ஆல்தோட்ட பூபதி பாடல் வாரிசு படத்தில் ரீமிக்ஸ் ஆகிறது.
சமீபத்தில் வாரிசு படக்குழு படத்தின் ரிலீஸ் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. தற்போது நடிகர் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு வரவிருப்பதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. எது உண்மை என்று தீபாவளி திருநாள் அன்று வெளியாகும் அறிவிப்பில் தெரிந்துவிடும்.