அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துணிவு படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள முன்னணி திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால் வாரிசு படத்திற்கு சரிசமமான அளவிலே திரையரங்குகள் கிடைப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு குற்றஞ்சாட்டி உள்ளார். அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக மார்க்கெட் இருப்பதால் விஜய்க்கு கூடுதல் அரங்குகள் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட தில் ராஜு, தம் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்று எதையும் பேசவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் பட்டியலை அந்த படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை,செங்கல்பட்டு, கோவை ,வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு என நான்கு விநியோகஸ்தர்கள் பகுதியில் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் வாரிசு படத்தை வாங்கி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதே போன்று சேலத்தில் செந்தில் , திருச்சி, தஞ்சையில் ராகு இன்ஃபோடைன்மென்ட், மதுரையில் பைவ் ஸ்டார் பிலிம்ஸ், திருநெல்வேலி கன்னியாகுமரியில் ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விநியோகம் உரிமையை வாங்கி இருப்பதாக வாரிசு பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனமே வாரிசு திரைப்படத்தை வெளியிட உள்ளதால் இனி துணிவு பணத்திற்கும் வாரிசு திரைப்படத்திற்கும் போதிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வராது என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு விஜய் ரசிகர்களால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் முக்கிய இடங்களில் விநியோஸ்தர் உரிமை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இனி எந்த படம் நன்றாக இருக்கிறதோ அந்த படத்திற்கு தான் முதல் மூன்று நாட்களுக்கு பிறகு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.