Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா? வாரிசு இசை வெளியிட்டு விழா தேதி இதோ?

தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா? வாரிசு இசை வெளியிட்டு விழா தேதி இதோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் உடைய வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த ஆனந்தத்தில் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு மேலும் கூடுதலான ஒரு மகிழ்ச்சியான தகவலும் வெளியாகி இருக்கிறது.

தளபதி ரசிகர்களுக்கு   தளபதி விஜய் உடைய நடிப்பு மட்டுமல்லாமல் அவருடைய மேடைப் பேச்சுக்கும் அவர்கள் பெரும் ரசிகர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். சாதாரணமாக அரசியல்வாதிகளும் பேச்சாளர்களும் தான் மேடைப் பேச்சில் ரசிகர்களை வெல்வார்கள். அந்த வகையில் ஒரு அரசியல்வாதியின் உடைய பேச்சுத்திறன் போன்ற கருத்துக்கள் நிறைந்த பேச்சைக் கொண்டு ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் தளபதி விஜய் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

- Advertisement -

அவர் பேச்சில் எப்பொழுதுமே ஒரு குட்டி ஸ்டோரி அடங்கி இருக்கும். அந்த குட்டி ஸ்டோரி மூலம் இளம் ரசிகர்களுக்கு இளைய தளபதி விஜய் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்.அதிலும் நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் உடைய ஆடியோ லாஞ்சில் அவர் பேசிய பேச்சு இன்று வரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் நாம் இழந்த பல விஷயங்களில் தளபதி விஜய் உடைய திரைப்படங்கள் உடைய ஆடியோ லான்ச் அவர் பேசும் பேச்சையும் நாம் இதுவரை இழந்திருக்கிறோம்.

- Advertisement -

இவர் நடித்த பீஸ்ட் திரைப்படங்களை கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டதால் இதற்கு பெருமளவில் ஆடியோ லான்ச் வைக்க முடியவில்லை. அதை ஈடு செய்யும் வகையில் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தின் உடைய ஆடியோ லான்ச் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த ஆடியோ லாஞ்சை  பிக் பாஸ் பைவ் என்னுடைய டைட்டில் வின்னரான  விஜய் டிவி புகழ் ராஜு என்கின்ற ராஜூ ஜெயமோகன் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதனால் தளபதி ரசிகர்கள் தளபதி விஜயின் உடைய பேச்சைக் கேட்பதற்கு பெருமளவில் ஆரம்பம் கொண்டு காத்திருக்கிறார்கள் இந்த முறையும் தளபதி விஜய் நிச்சயம் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Most Popular