தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குராக உள்ள வெற்றிமாறன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விடுதலை படம் வழக்கம் போல் வெற்றிமாறனின் ஸ்டைலில் வித்தியாசமாக மக்களின் பிரச்சினை பேசும் வகையில் இருக்கும் என செய்திகள் வெளி வந்தன. எனினும் விடுதலை படம் நினைத்ததை விட படத்தை எடுத்து முடிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. இதனால் சூரி எந்த படத்திலும் நடிக்க முடியாமல் இதற்கு கவனம் செலுத்தி வந்தார். விடுதலை படத்திற்காக பல்வேறு வாய்ப்புகளை சூரி நிராகரித்தார்.
இதேபோன்று வெற்றிமாறனுக்கும் விடுதலைப் படம் முடிவடையாததால் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பும் அவருக்கு பறிபோனது. விடுதலையை விரைவில் முடித்துவிட்டு வாடிவாசலை இயக்க உள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுதலை முடியவே 2022 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் விடுதலை திரைப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை படம் முடிவடைந்ததை அடுத்து வெற்றிமாறன் இனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து படம் எடுக்க போகிறாரா? இல்லை நடிகர் விஜயை வைத்து படம் இயக்கப் போகிறாரா இல்லை வாடிவாசல் படம் தொடருமா என்று பல கேள்விகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் உள்ளது.