Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாசிரஞ்சீவி, பாலக்கிருஷ்ணாவிடம் பணிந்த 'தில்' ராஜூ.. கடைசி நேரத்தில் டிவிஸ்ட்

சிரஞ்சீவி, பாலக்கிருஷ்ணாவிடம் பணிந்த ‘தில்’ ராஜூ.. கடைசி நேரத்தில் டிவிஸ்ட்

- Advertisement -

தளபதி விஜய் தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை அதிகரிப்பதற்காகவே தெலுங்கு இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்தார். விஜய் கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னுடைய தமிழ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தன்னோட தெலுங்கு டப்பிங் படத்தையும் ரிலீஸ் செய்யும் பழக்கத்தை கொண்டு வந்தார். இந்த நிலையில் தெலுங்கில் வாரிசுடு என்ற தலைப்பில் படம் ரிலீஸ் ஆக இருந்தது.

தமிழ் பதிப்பு ஒரு பதினொன்றாம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு டப்பிங் அதே நாள் ஆந்திராவில் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என கருதப்பட்டது. எனினும் வாரிசுடு படத்தை தொடர்ந்து பன்னிரண்டாம் தேதி பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டியும் அதனை தொடர்ந்து 13-ஆம் தேதி சிரஞ்சீவி நடித்துள்ள வால்டைர் வீரய்யா படமும் ரிலீஸ் ஆக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தில் ராஜு ,தெலுங்கு சூப்பர் ஸ்டார் களின் படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாரிசுடு திரைப்படத்தை பதினொன்றாம் தேதியிலிருந்து 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார். இது அங்குள்ள விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என விஜய்யின் கணக்கு இதன் மூலம் தவறாக மாறிவிட்டது என்று சினிமா விமர்சனம் கருதுகின்றனர். இந்த நிலையில் இந்த தள்ளிவைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர்கள் ராஜு , வாரிசு ஒரு நல்ல திரைப்படம். தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆகும் என்று என்னால் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

- Advertisement -

நல்ல படங்கள் எந்த தேதியில் ரிலீஸ் ஆனாலும் வெற்றி பெறும். வாரிசுடு 14ஆம் தேதி ரிலீசானாலும் தெலுங்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். வாரிசுடு படத்திற்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த இருக்கிறோம். அதில் பங்கேற்குமாறு நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் அவர் வருவார் என நம்புகிறேன் என்று தில் ராஜு கூறியுள்ளார்.

Most Popular