Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு இண்டர்வலில் வாரிசு பாடல்.. கொதித்து எழுந்த அஜித் ரசிகர்கள்

துணிவு இண்டர்வலில் வாரிசு பாடல்.. கொதித்து எழுந்த அஜித் ரசிகர்கள்

- Advertisement -

ஒரு வழியாக தமிழகம் முழுவதும் துணிவு,  வாரிசு பல்வேறு எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸ் ஆனது. தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக விளங்கும் அஜித், விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ஒரே திரையரங்கில் குவிந்ததால் பரபரப்பு நிகழ்ந்தது
சென்னை ரோகினியில் ஒரு போர்க்களமே நடந்து முடிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்கம் ஒன்றில் ஒரு அட்டகாச சம்பவம் நடைபெற்றுள்ளது.

துணிவு திரைப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் சென்ற நிலையில் இரண்டாவது பாதிக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். திரையரங்கு ஊழியர்கள் இன்டர்வல் நேரத்தில் வாரிசு பாடலை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் பாடலை உடனே நிறுத்துமாறு குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. தீ இது தளபதி உங்கள் நெஞ்சில் அதிபதி என்ற வரிகள் வந்தபோது அஜித் ரசிகர்கள் தங்களுடைய பொறுமையை இழந்து ஆப்பரேட்டர் ரூம் வரை சென்று பாடலை மாற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இதனால் திரையரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதில் ஒரு ஹைலைட்டான விஷயம் இருக்கிறது .படத்தின் இன்டெர்வளில் விஜய் பாடல் போடப்பட்டதற்கு அஜித் ரசிகர் கடுப்பான நிலையில், துணிவு படத்தில் விஜயின் டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடல் வந்திருக்கிறது. இதனைப் பார்த்து அஜித் ரசிகர் நிச்சயம் விரக்தி அடைந்து இருப்பார்கள்.

எனினும் பொதுவான ரசிகர்களிடையே இது நல்ல அம்சமாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே மங்காத்தா படத்தில் காவலன் திரைப்படத்தில் வரும் விண்ணை காப்பான் ஒருவன் பாடல் காட்சி வரும். அதனை எல்லாம்  அப்போதைய ரசிகர்கள் வரவேற்ற நிலையில் தற்போது 2கே கிட்ஸ்கள் இன்டெர்வலில் கூட விஜய் பாடல் போடக்கூடாது என்று சண்டை போடும் அளவிற்கு செய்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Most Popular