Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஅரைசதம் அடித்த வாரிசு, துணிவு.. 3வது நாள் வசூலில் முந்தியது யார்?

அரைசதம் அடித்த வாரிசு, துணிவு.. 3வது நாள் வசூலில் முந்தியது யார்?

- Advertisement -

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் ஜனவரி பதினொன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இரண்டு திரைப்படங்களும் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று பரஸ்பரமாக போஸ்டர்களை வெளியிட்டு இருப்பது இந்த சண்டையை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. முதல் நாள் வசூலை காட்டிலும் இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் வசூல் கடுமையாக சரிந்துள்ளது.

இதற்கு காரணம் தவறான தேதியில் படம் ரிலீஸ் செய்தது தான் என்று பலரும் குற்றச்சாட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த நிலை இன்றிலிருந்து மாறத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் ஹிந்தியில் நேற்று ரிலீசானது. இதில் ஒன்றரை கோடி ரூபாய் வசூலை வாரிசு திரைப்படம் ஹிந்தியில் மட்டும் ஒரே நாளில் படைத்திருக்கிறது. முதல் வெள்ளிக்கிழமையான நேற்று தமிழகத்தில் வாரிசு திரைப்படம் 8 கோடியே 25 லட்சம் ரூபாயும், துணிவு திரைப்படம் 8 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் மூலம் முதல் நாளில் துணிவு திரைப்படம் கூடுதலாக வசூல் பெற்ற நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் வாரிசு முதலிடம் பிடித்திருக்கிறது. எனினும் தமிழக வசூலில் முதல் 3 நாட்களில் துணிவு திரைப்படம் 37 கோடியே 50 லட்சம் ரூபாயுடன் முதலிடத்திலும், வாரிசு திரைப்படம் 37 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்திய அளவில் இரண்டு திரைப்படங்களுமே 50 கோடி வசூலை தாண்டி இருக்கிறது.

- Advertisement -

இதில் வாரிசு திரைப்படம் 57 கோடி வசூலுடன் முதல் இடத்திலும், துணிவு திரைப்படம் 52 கோடி உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று முதல் பொங்கல் விடுமுறை தொடங்குவதால் இரண்டு படங்களின் வசூலும் டபுலாகும் என கணிக்கப்பட்டுள்ளது. வாரிசு தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது அதன் வசூல் இந்திய அளவில் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. துணிவு திரைப்படத்தில் தெலுங்கு டப்பிங் இரண்டரை கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், அங்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Most Popular