Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாநீ ஆபிசுக்கு வா! வாரிசு குறித்து பதிவு.. சண்டை போட்ட துணிவு படக்குழு

நீ ஆபிசுக்கு வா! வாரிசு குறித்து பதிவு.. சண்டை போட்ட துணிவு படக்குழு

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை குடும்ப மக்கள் அதிகமாக பார்ப்பதாக விமர்சகர் ஒருவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு துணிவு படக் குழு எதிர்ப்பு தெரிவித்ததால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் வகிப்பவர் ராகுல். இவர் போனி கபூரிடம் பணிபுரிந்த நிலையில் தற்போது ரெரட் ஜெயின்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். துணிவு திரைப்படத்தின் பல்வேறு தயாரிப்பு பணிகளில் ராகுல்தான் செய்து வருகிறார்.

படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து திரைப்பட வர்த்தக நிபுனர் துணிவை விட வாரிசு அதிகமாக வசூல் இருப்பதாக பதிவிட்ட நிலையில் அவரை மிரட்டும் விதமாக துணிவு இருந்தால் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து படத்தின் வசூல் குறித்து கேள் என்று ராகுல் காட்டமாக பதில் அளித்தார்.

- Advertisement -

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ராகுல் விமர்சகர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரபல திரைப்பட விமர்சனம் பிரசாந்த், வாரிசு திரைப்படத்தை குடும்ப உறுப்பினர்கள் நிறைய பேர் பார்ப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனால் கடுப்பான ராகுல் துணிவு திரைப்படமும் நிறைய பேர் பார்க்கிறார்கள் என்று பதில் அளித்தார். இதற்கு பிரசாந்த் ரங்கசாமி, இரண்டு படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். இதனால் நீங்கள் கொஞ்சம் கூலாக இருங்கள் என்று பதில் அளித்தார்.

- Advertisement -

இதற்கு மீண்டும் பதில் கொடுத்த ராகுல் இரண்டு திரைப்படமும் நன்றாக ஓடுவதாகவும் எனினும் ஒரு சிலரை வெளிச்சத்துக்கு கொண்டு வர இப்படி பதிவு செய்கிறேன் என்றும் அவர் கூறினார். இதற்கு மீண்டும் பதில் அளித்த பிரசாந்த் ஆந்திராவில் இருப்பது போல் படத்தின் வசூல் தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக வெளியிட்டால் இந்தப் பிரச்சினை வராது.நீங்கள் ட்விட்டரில் ஏன் வசூலை வெளியிடக்கூடாது என்று கேட்க அதற்கு ராகுல் ஆந்திராவும் தமிழ்நாடும் ஒன்றல்ல. நான் ஒரு வியாபாரி. நீங்கள் ஏன் என் அலுவலகத்துக்கு வந்து ஒரு காபி குடித்துவிட்டு இது பற்றி பேசக்கூடாது என்று மீண்டும் மிரட்டும் தோணியில் ராகுல் பதிவிட்டார். இதற்கு பிரசாந்த் ஹேப்பி வீரசிம்ஹா ரெட்டி பொங்கல் ப்ரோ என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular