Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68- விஜய்யுடன் இணையும் ஹெச். வினோத்! வேற லெவல் கதை ரெடி

தளபதி 68- விஜய்யுடன் இணையும் ஹெச். வினோத்! வேற லெவல் கதை ரெடி

- Advertisement -

தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த இயக்குனராக வளம் வருபவர் எச் வினோத். சதுரங்க வேட்டை எனும் சின்ன படம் மூலம் பெரிய பெயர் வாங்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.  அதன் பிறகு கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்து தமிழ் திரை உலகத்தை ஹச்.வினோத் மிரட்டினார். அதன் பிறகு அஜித் கவனத்தை பெற்ற எச்.வினோத். தொடர்ந்து அவருடன் நேர்கொண்ட பார்வை, வலிமை துணிவு என்று மூன்று படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலை அஜித்தின் ஃபேவரட் இயக்குனராக இருந்த  வினோத் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். தற்போது விஜய் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே மாதத்தில் முடிந்துவிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய ப வினோத் நடிகர் விஜய்க்கு பல கதைகள் சொல்லி இருப்பதாகவும், அதில் அனைத்துமே அரசியல் தொடர்பானவை என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

விஜய் எந்த படத்தை தேர்ந்தெடுக்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ள வினோத், விஜயுடன் இணைந்தால் அரசியல் கதைகளத்துக் கொண்ட படமாக தான் எடுப்பேன் என்று வினோத் கூறியுள்ளனர். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நடிகர் தனுஷ் வைத்து எச்.வினோத் ஒரு படம் எடுக்குகிறார். அதன் பிறகு கமல்ஹாசன் உடன் இணைகிறாரா அல்லது விஜயுடன் இணைகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த செய்தி வெளியானதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அஜித்தை வைத்து ஹிட் கொடுத்த வினோத் விஜய் உடன் இணைந்தால் படம் இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இது விஜயின் 68வது படமாக இருக்குமா இல்லை 69ஆவது படமாக இருக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை. விஜய்யின் கைராசி இயக்குனரான அட்லியும் ஒரு கதை சொல்லியிருப்பதால் முதல் எந்த படத்தை விஜய் தேர்ந்து எடுப்பார் என்று கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்து உள்ளது.

Most Popular