தமிழ் சினிமாவில் அனைவரின் கவனத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். விக்ரம் திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விக்ரமை தனது படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாக செய்திகள் அண்மையில் வெளியாகின.
அதாவது விக்ரம் படத்தில் சூர்யா செய்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முதலில் விக்ரமுக்கு தான் இயக்குனர் லோகேஷ் கூறியதாகவும், ஆனால் அதனை அவர் நடிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தளபதி 67 படத்தில் தற்போது அர்ஜுன் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் விக்ரமை நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டார்.
எனினும் அதிலும் நடிக்க விக்ரம் மறுத்து விட்டதாக தெரிகிறது. விக்ரம் 2 திரைப்படத்தின் பெரிய கேரக்டர் ஒன்றை உருவாக்கி அதில் நடித்த விக்ரமிடம் லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார். அந்த கதாபாத்திரம் விக்ரமுக்கு பிடித்து விட்டதாகவும் விரைவில் விக்ரம் 2 படம் தொடங்கும் போது அதில் விக்ரம் இணைவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சூர்யா விக்ரம் ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இணைய உள்ளனர். தற்போது விக்ரம் பா.ரஞ்சித் படத்தில் நடித்து வருகிறார்.
அது முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கத் தொடங்கினால் அதில் அவர் இனிய வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை விக்ரம் மறுத்துவிட்டது தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயுடன் விக்ரம் இணைந்து இருந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் ஆனால் அது நடக்காமல் போனது வருத்தம் தான் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் மார்க்கெட்டை விரிவுபடுத்த வேண்டும் என்றால் தெலுங்கு அல்லது ஹிந்தி நடிகர் ஏதேனும் ஒருவரை படத்தில் நடிக்க வைத்தால் வெளி மாநிலங்களில் வசூல் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.