நகைச்சுவை நடிகராக கோலிவுட்டுக்குள் நுழைந்த சந்தானம் அதில் சிறந்து விளங்கி சில ஆண்டுகளுக்குப் முன் ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோ ஆகியப் பின் அவரது காமெடியின் தரம் குறைந்ததை உணரலாம், இருப்பினும் இடையே அங்கு அங்கு சில நல்ல படங்களும் தந்துள்ளார். ரசிகர்கள் பலர் அவரை மீண்டும் ஓர் முழு நேர நகைச்சுவை நடிகராக பார்க்க வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர்.
அவரும் அதை பின்பற்ற முடிவு செய்துவிட்டார் என்றே தெரிகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்குமார் 62 படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதுள்ளார். அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைகிறார். அப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சுந்தர்.சி கூட காமெடிக்கு பெயர் போனவர் தான். அவரின் இயக்கத்தில் சந்தானம் கலகலப்பு, அரண்மனை 1, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்துள்ளார். மீண்டும் அவர்களது காம்போவில் ஓர் நகைச்சுவை படம் வருவது படத்திற்கு முதல் பாசிட்டிவ்.
மறுபக்கம் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதியும் பல்திறன் கொண்டவர் தான். ஹீரோ, வில்லன், காமெடி என அனைத்து துறைகளிலும் பார்வையாளராக கவரக் கூடிய திறமை கொண்டவர். காமெடி நடிகராக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நம்மளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் சந்தனமா இருவரும் சுந்தர்.சியின் அடுத்த படமான அரண்மனை 4க்கு இணைகின்றனர். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜனவரி 21 அன்று சந்தானம் & சுந்தர்.சி இருவரும் அவர்களது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இச்செய்தியை வெளியிட்டனர். நேற்று ஒரே இடத்தில் பக்கம் ராகவலாரன்ஸ் அந்தப் பக்கம் சுந்தர்.சி, இருவரும் தங்களது பேய் கதைகளுக்கு எல்லை இல்லை என்பதை ஏற்கனவே தீர்மாதிவிட்டனர் எனத் தெரிகிறது. இருப்பினும் குழந்தைகளை வைத்து படத்திற்கான லாபத்தை திருப்பி எடுத்துவிடலாம். இம்முறை சந்தானம் இருப்பதால் படம் அனைவர் ரசிக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.