பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் தனது அடுத்த படத்தை கம்ப்ளீட் ஆக்ட்டர் மோகன்லாலை வைத்து ‘ மலைக்கோட்டை வாலிபன் ’ எனும் படத்தை இயக்குகிறார். அங்கமலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமா பிரியர்களின் விருப்பமான இயக்குனர்களில் ஒருவரான சேர்ந்துவிட்டார்.
இந்த வருடம் மமூட்டி நடித்த ‘ நண்பகல் நேரத்து மயக்கம் ’ படத்தையும் இவர் தான் உருவாக்கினார். படம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் லிஜோ ஜோஸ் மோகன்லால் படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் விரைந்து நடைபெற்று வரும் வேளையில் ருசிகரமான செய்தியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மோகன்லாலுடன் இரு பெரிய தலைகள் கமல் ஹாசன் மற்றும் ஜீவா லிஜோ ஜோஸ் இயக்கும் படத்தில் நடிக்கின்றனர். பெரிய ரோல் இல்லை, வெறும் சிறப்புத் தோற்றம் மட்டுமே.
குஜராத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் இருவரும் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் உன்னைப் போல் ஒருவர் படத்தில் இதற்கு முன் கமல் ஹாசன் நடித்திருந்தார். மறுபக்கம் ஜீவா ஏற்கனவே இதே போல் ஒரு முறை மோகன்லால் படத்தில் சிறப்புத் தோற்றம் அளித்துள்ளார், அப்படத்தின் பெயர் தளபதி நடித்த ஜில்லா.