Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாமெர்சலுக்கு வந்த அதே சிக்கல்.. அகிலன் தடைகளை உடைப்பாரா?

மெர்சலுக்கு வந்த அதே சிக்கல்.. அகிலன் தடைகளை உடைப்பாரா?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற திரைப்படம் நடித்து உள்ளார். இந்தத் திரைப்படம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணனும் நடிகர் ஜெயம் ரவியும் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் 2வது திரைப்படம் ஆகும். இந்த அகிலன் திரைப்படம் ஒரு டிராமா ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தின் தன்யா ரவிச்சந்திரன், ப்ரியா பவானி சங்கர், தருண் அரோரா, ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

மேலும் விக்ரம் வேதா, இஸ்பெட்டா ராஜாவும் இதய ராணியும் ,புரியாத புதிர் ,ஆயிரம் கண்கள் கைதி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷ்யாம் சி எஸ் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

அகிலன் திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்கள் தற்பொழுது வெளியாகியிருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜய் உடைய மெர்சல் திரைப்படத்தில் விலங்குகளை வைத்து நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டிருந்ததால் அந்த திரைப்படத்தை  வெளியிடுவதற்கு வனத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற சிக்கல் எழுந்தது. அந்த சான்றிதழ் பெற்றதற்கு பிறகு அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று இந்த அகிலன் திரைப்படமும் துறைமுகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பேரிலேயே தெ கிங் ஆப் இந்தியன் ஓசன் என்ற பெயர் பெற்றிருப்பதால் இது கடல் சார்ந்த கதைக்களத்தில் அமைந்திருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் இந்த  அகிழன் திரைப்படத்திற்கும் என் சி ஓ என்று சொல்லப்படும் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு சற்று தாமதமான நிலையில் தற்பொழுது இந்த சான்றிதழை பெறுவதற்கான வேலை ஏறத்தாழ முடிவடைந்ததாகவும் விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாரான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நடிகர் ஜெயம் ரவிக்கு என்று பல ரசிகர்கள் பட்டாளம் தொடங்கி இருக்கும் இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் இந்த அகிலன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது.

Most Popular