Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த தளபதி 67

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த தளபதி 67

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி 67 தான். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் பெயர் கூட சூட்டப்படாத நிலையில் தமிழ் சினிமாவில் பெரிய வரலாற்று சாதனையை தளபதி 67 படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி படம் முடிவதற்கு முன்பே போட்ட பணத்திற்கு மேல் லாபத்தை ஈட்டி விட்டதால் தயாரிப்பு குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு படத்திற்கும் வருமானம் என்பது திரையரங்கு உரிமத்தை தவிர தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் ,ஆடியோ ரைட்ஸ் ,ஹிந்தி டப்பிங் உரிமம் என பல்வேறு முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு லாபம் ஈட்டப்படும். இந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு ஓடிபி தொலைக்காட்சி மற்றும் ஆடியோ உரிமம் என மூன்றிலும் வரலாற்று அளவில் முதல் முறையாக பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக ஓடிடி உரிமத்தை netflix நிறுவனம் 150 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் மூலம் தென்னிந்திய திரைப்படத்திற்கு அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட  பெருமையை தளபதி 67 பெற்று இருக்கிறது. இதேபோன்று தளபதி 67 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி நிறுவனம் தொடர்ந்து ஆறாவது முறையாக விஜய் படத்தை வாங்கி இருக்கிறது. இதற்காக 80 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமத்திற்கு 16 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம் 246 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் மிக அதிக தொகை விற்பனை ஆன முதல் திரைப்படம் என்ற பெருமை தளபதி 67 பெற்று இருக்கிறது. இது அனைத்தும் படம் பூஜை போடுவதற்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், ஆந்திரா, ஹிந்தி ,கேரளா, கர்நாடகா வெளிநாட்டு உரிமம் ஆகிய திரையரங்கு உரிமம் விற்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக சுமார் 500 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Most Popular