துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் அஜித்குமார் அவர்கள் தன் 62வது படத்தை ஆரம்பிக்க இருந்தார். ஆனால் அங்கு தான் டுவிஸ்ட். படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் முழுமையாக தன் வேலையை இன்னும் முடிக்காததால் லைகா நிறுவனம் அவரை தூக்கியது. இன்று தன் டிவிட்டர் பையோவில் ஏ.கே 62 என குறிப்பிட்டிருந்ததையும் அஜித்குமாரின் படத்தையும் நீக்கி அதை உறுதிப்படுத்தினார் விக்னேஷ் சிவன்.
இதனால் அடுத்த இயக்குனருக்கான தேடல் துவங்கியது. வழக்கம் போல வதந்திகளும் பரவின. சிலர் விஷ்ணு வர்தன் எனவும் சிலர் ஏ.ஆர்.முருகதாஸ் எனவும் செய்திகள் பரப்பினர். ஆனால் அதிகாரபூர்வமாக இன்னும் எதுவும் வெளியாகவில்லை. தகுந்த வட்டாரங்கள் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தை வழிநடத்தவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் சிலர் மகிழ் திருமேனி 2 மாதங்கள் நேரம் கேட்டதாகவும் கூறுகின்றனர். லைகா நிறுவனம் விரைந்து அஜித்தை வைத்து பெரிய படம் ஒன்றை உருவாக்கும் நினைப்பில் இருக்கிறது.
இன்று நேர்க்கானல் ஒன்றில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் தனக்கு கிடைத்த செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் எழுதிய கதையை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறாராம். இது லாக் ஆகியுள்ளதாக தயாரிப்பாளார் ரவீந்தர் சொல்லி இருக்கிறார். இந்த வாரத்திற்குள் லைகா நிறுவனம் அந்த அறிவிப்பையும் கொடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கதைகளில் சமூக கருத்துகள் மற்றும் நிறைய செய்திகள் கொட்டிக் கிடக்கும். இது ஃபேமிலி ஆடியன்ஸை கைக்குள் அடக்கும். அஜித் எப்போதும் போல அவரது ஃபேமிலி ஆடியன்ஸ் மார்க்கெட்டை இழக்க விரும்புவதில்லை. அதனால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிய உள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் சரியாக இன்னும் 7 நாட்களில் தெரிந்துவிடும்.