தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் 8 ஆண்டுக்குப் பிறகு இந்த பொங்கலுக்குத் தான் அஜித் – விஜய்யின் மோதலைக் கண்டனர். இரு படங்களும் வசூலில் மாறி மாறி சாதனைக் கற்களை தகர்த்து வருகிறது. பிப்ரவரியில் சகோதரர்கள் தனுஷ் – செல்வா ஒரே நாளில் வாத்தி – பகாசூரன் படங்களை வெளியிடுகின்றனர். அதன் பிறகு மார்ச்சில் சிலம்பரசனின் பத்து தல படமும் சிவகார்த்திகேயனின் மாவீரணும் மோதவுள்ளன. ஆனால் மாவீரன் படக்குழுவினர் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை.
2023ஆம் ஆண்டு மோதலுக்கான ஆண்டு போல. மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொன்னியின் செல்வன், லியோ, ஜெயிலர், இந்தியன் 2, அஜித் 62 போன்ற பெரிய படங்கள் உள்ளன. அதில் பொன்னியின் செல்வன் ஏப்ரல் மாதம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. லியோ படக்குழுவினரும் ஆயுத பூஜையை ரிசர்வ் செய்து விட்டனர். மீதம் இருப்பது அஜித் 62, இந்தியன் 2, ஜெயிலர் தான்.
அஜித்தின் 62வது படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் இந்தியன் 2 படத்தையும் தயாரிக்கிறது. அதனால் ஒரே நாளில் வெளியாக சாத்தியமே இல்லை. இந்தியன் 2 படத்தின் பணிகள் இன்னும் நிறைய இருப்பதால், அது பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறுகின்றனர். மறுபக்கம் அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி விரைவில் முடித்துவிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழுவினர் தீபாவளிக்கு திட்டமிட்டுள்ளனர்.
ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஓர் நடிப்பு அரக்கப் பட்டாளமே உள்ளது. அயராது பணிபுரிந்து வரும் நெல்சன் இம்முறை சாத்திதே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். முதலில் ஏப்ரல் மாதம் வரும் எனக் கூறப்பட்டிருந்த படம் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அது இன்னும் உறுதியாகவில்லை. பட வேலைகள் இன்னும் நேரம் இழுத்தால் நிச்சயம் தீபாவளிக்கு தான். அதே சமயம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் இரு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் வருவதும் கஷ்டம் தான். அதுவும் அஜித் என்றால் இன்னும் பயம் தான். விஸ்வாசம் – பேட்ட மோதல் சன் பிக்சர்ஸ் கண் முன் வந்து போகும். அதனால் எப்படியாவது ஆகஸ்ட் மாதமே வெளியிடும் கட்டாயத்தில் சன் நிறுவனம் உள்ளது.