பொதுவாக பிப்ரவரி மாதத்தை சினிமா வறட்ச்சி என்பர். பெரிய படங்கள் எதுவும் விடுமுறை தினங்கள் இல்லாததால் வெளியாகது, அதனால் திரையரங்குகள் காலியாகவே தொடரும். துணிவு, வாரிசு தவிர ரன் பேபி ரன் ஓரளவு கூட்டத்தைச் சேர்த்து மற்ற படி பெரிதாக எதுவும் தேரவில்லை. காதலர்கள் வாரத்திற்கு கூட தமாஷா, மின்னலே, டைட்டானிக் போன்ற பழைய ரொமாண்டிக் படங்களே ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
அடுத்த மாதமும் பெரிய படங்கள் எதுவும் இல்லை. மாதக் கடைசியில் தான் பெரிய விருந்து காத்திருக்கிறது. டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய சிம்புவின் பத்து தல அடுத்த மாதம் வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் சில நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மோகன்லாலின் முஃப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் சிலம்பரசனுடன் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 மோதுகிறது. சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற 2 ஆண்டுகளாக உருவான இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எராளாம். முதல் பாகம் அடுத்த மாதமும், இரண்டாவது இட்மஸ் ஆண்டு இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் போல எதிர்பார்க்கலாம்.
அண்மையில் இரு படங்களின் முதல் சிங்கிலும் வெளியானது. இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பக்கம் ரஹ்மான் அந்தப் பக்கம் இளையராஜா. சிம்புவுக்கு எதிரான படத்தின் முதல் பாடலை அவரது போட்டியாளர் தனுஷ் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் துணிவு வாரிசை விட சிறப்பாக அமையும் போல. இந்த மோதலில் ஒரு சிறிய டுவிஸ்ட், இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகிறது. மார்ச் 30ஆம் தேதி பத்து தல அடுத்து நாள் விடுதலை பாகம் 1.
சிம்புவின் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளம் முழுமையாக கொண்டாடவும் முதல் நாள் கலெக்ஷன் பெரிதாக இருக்கும் என்பதற்காகவும் விடுதலை அடுத்து நாள் வருகிறது. இதன் மூலம் தியேட்டர்கள் இந்த மாத வறட்சியை ஈடுகட்டும்.