எப்போதுமே பழைய திரைப்படங்கள் மீண்டும் ரீரிலிஸ் ஆகி திரையரங்குக்கு வந்தால் அதைப் பார்ப்பது தனி சுகம் தான். அப்படி சமீபத்தில் வெளியான பாபா திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்தது. இந்த நிலையில் பாபா திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் பாராட்டும் விதமாக நடிகர் ரஜினி , வீட்டுக்கு அழைத்து பரிசு வழங்கினார்.
மேலும் பாபா படத்தில் பணியாற்றியவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் தென்னிந்திய திரைப்படங்கள் மீண்டும் ரிலீசாகும் போது முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படங்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.இது பவன் கல்யாண் நடித்த தெலுங்கு குஷி படம் அண்மையில் ரிலீஸ் ஆனது. இதில் முதல் நாள் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
இதனை அடுத்து ஜல்சா என்ற திரைப்படம் இரண்டாவது இடத்திலும், மகேஷ்பாபுவின் ஒக்கடு மூன்றாம் இடத்தில் உள்ளது. இதேபோன்று மகேஷ்பாபு நடித்த போக்கிரி திரைப்படம் நான்காவது இடத்திலும், தற்போது வெளியாகியுள்ள மோகன்லாலின் ஸ்பாடிக்கலம் திரைப்படம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் 10 இடத்தில் இரண்டே இரண்டு தமிழ் படம் தான் பிடித்திருக்கிறது. அது இரண்டுமே ரஜினி திரைப்படம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாட்ஷா திரைப்படம் ரீ ரிலீஸ் இன் முதல் நாளில் 90 லட்சம் ரூபாய் வசூல் செய்து எட்டாம் இடத்தில் உள்ளது.
பாபா முதல் நாளில் 75 லட்சம் ரூபாய் வசூல் செய்து ஒன்பதாவது இடத்திலும் உள்ளது . முதல் 10 இடங்களில் ஏழு தெலுங்கு படமும் , இரண்டு தமிழ் படமும் ஒரு மலையாள படமும் இடம் பிடித்துள்ளன. தமிழ் படங்கள் அவ்வளவாக ரிலீஸ் செய்யப்படாததால் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை .இதை போன்று அஜித் ,விஜய் ,சூர்யா ஆகியோர்களின் பிளாக்பஸ்டர் படங்கள் ரிலீஸ் செய்தால் நமது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன?